கார்காலம்!
அது ஒரு காலம் கண்ணே! அதுதான் கார்காலம்! எங்கும் மழை…எதிலும்…,மரங்களிலும்,குடிசைகளிலும்,பள்ளிகளிலும்,பாடங்களிலும்… அரசுப் பேருந்துகளிலும் மழை! தூரத்தில் ஒரு மரம்.……!தண்ணீர் விழுதுகளைத் தரைக்கனுப்பிக் கொண்டிருக்கும் மரம்.அந்தக் குடை ஒழுகும் என்று அறிந்திருந்தும் ஒதுங்கினேன்!என் கனவுகளைக் காயம் செய்த அவளும்…நனவுக் கன்னியாக மாறி…அருகில் ஒதுங்கினாள்!எங்களைப் பூ தூவி வரவேற்றது அந்த மரம்!சேமித்து வைத்திருந்தத் தண்ணீர்க் காசுகளை தாராளமாக …அந்த இலைகள் எங்களுக்காக செலவு செய்தன! நீர்த் திவலைகள் அவள் தலைக்கூந்தலுக்கு நேர் வகிடெடுத்து …அந்த ஒத்தையடிப் பாதையில் ஓடிச்கொண்டிருந்தன! அந்த கண்கொள்ளாக் காட்சியளித்த மழைக்கு நன்றி!நான் என் பெருமூச்சில் …குளிருக்கு விடை கொடுத்தேன்!எங்கள் இருவருக்கிடையில் …நாற்காலி போட்டு அமர்ந்திருந்ததோ…வெறுக்கத் தக்க அந்த நாகரிகம்! எவ்வளவோ பேசத் துடிக்கும் மனம் மத்தியில் …மௌனம் பசை தடவி ஒட்டப்பட்டிருந்தது!அந்த ……அன்று மலர்ந்த அவள் மலர் முகத்தில் …பனித்துளியாகிவிடும் பயத்தில்…நீர்த்துளிகள் …பட்டுத் தெறித்தன! காணக் கண் கோடி தேவை! இதோ ஒரு வாய்ப்பு…கதவைத் தட்டுதே! அவளுக்குப் பொன்னாடைப் போர்த்தும் …ஜொள்ளில் …எனதுக் கைக்குட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன்! அதை ஏற்றுக் கொண்டபடி அவள் நெற்றி ஒத்தி… திருப்பித் தந்தாள் .என் கவலையெல்லாம் …மழை நிற்க வேண்டாம்.அந்தக் கைக்குட்டை உலரவேண்டாம்…அதற்கு ஏதேனும் உத்தி உண்டா……? கூகுள் செய்து தேடிக் கொண்டிருந்தது…என் மனம்! மாறாக……மழை சனியன் நின்று தொலைத்தது!அவள் விடை பெற்றாள்…! ஆனால் அவள்… சிரிப்பில் ………நன்றி சொல்லிய அந்த அபூர்வப் புன்னகைமட்டும் எனக்கே…எனக்கு! எனக்கது போதுமென்றது …என் போதும் என்ற நல்ல மனம்!அவள் சென்றே மறைந்தாள்!
அப்போது…வெளியில் நின்ற அந்த மழை …என்னுள் பெய்தது……! ஆனால்…இந்த மழை …சனியன்மழை அல்ல!இனிக்கும் மழை! இதமான மழை!
அது ஒரு காலம் கண்ணே! …………கார்காலம்! கனிந்ததோர்க் கார்காலம்!!!!😃😃!!!
அப்போது…வெளியில் நின்ற அந்த மழை …என்னுள் பெய்தது……! ஆனால்…இந்த மழை …சனியன்மழை அல்ல!இனிக்கும் மழை! இதமான மழை!
அது ஒரு காலம் கண்ணே! …………கார்காலம்! கனிந்ததோர்க் கார்காலம்!!!!😃😃!!!
