*உணவுக்குக் கையேந்தலாம்.....உறவுக்கு ?*
மனிதன் தனியாக வாழமுடியுமா ? அவன் விழுந்தால் தூக்கிவிடவும்,சோர்ந்தால் ஆறுதல் சொல்லவும் ,அவனுக்குத் துணை வேண்டாமா ? கோடிக்கணக்கில் ஜனத்தொகை உள்ள இந்நாட்டில் ,அவனது தேவையறிந்து உதவ ஒரு மனம் கிடைக்குமா ? அதற்கு உத்தரவாதம் உண்டா ?
அதற்கு உறவுகள் தேவை ! அதை உருவாக்க வேண்டும் ! அந்த நோக்கில் உருவாக்கப் பட்டவையே.... குடும்பங்கள் ! கூடிவாழும் பழக்கங்களும் உருவாக்கப் பட்டன !
*கூடி வாழ்தலின் தொடக்கமே.....இந்த....திருமணங்கள் !*
சொந்தங்கள் இருவரில் ஆரம்பித்து பிள்ளைகள்,மருமகள் மருமகன்,பேரக்குழந்தைகள் என உறவுகள் விரிவடைந்தன ! பெண்ணைக் கொடுத்து......எடுத்து.....சொந்தங்களில் ஓர் பிடிப்பு ஏற்படுத்தப் பட்டது ! இப்படியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையில் ....அனாதை எண்ணம் மறைந்து ஒரு சமூக பாதுகாப்பு அவனுக்குக் கிடைத்தது !
அந்தத் தத்துவமோ....இன்று தலைகீழாய்ப் புரண்டு போய்க் கிடைக்கிறது ! உறவுகள் உடைந்து போய் ....உலகம் சுருங்கிக் கிடக்கிறது !
சொந்தங்களை....தொல்லை என்கிறார்கள் ! பாசத்தை விலங்கு என்றும் ,தேவையில்லை எனவும் நினைக்கிறார்கள் ! பெற்றோரை பாரமாகக் காண்கிறார்கள் ! திருமணங்களில் .......அவனையோ,அவளையோ மட்டும்....தனியாக......உறவுகளை உதறிவிட்டு வரச்சொல்கிறார்கள் ! முதலிரவு வேண்டும் குழந்தை வேண்டாமாம் !
இன்று எல்லாருக்கும் வீடு இருக்கிறது ,ஆனால் குடும்பம் இல்லை ! சொத்து உண்டு,சொந்தங்கள் இல்லை ! பணம் இருக்கிறது பாசம் இல்லை ! மனம் உண்டு, அமைதி இல்லை !
இப்படி வாழும் மனிதன் துன்ப காலத்தில் மட்டும் ஆறுதல் தேடி அலைவதில் அர்த்தம் உண்டோ ? யாரிடம் சொல்லுவான் ? மருத்துவரிடமா ? மாத்திரையிடமா ? சொந்தபந்தங்கள் அப்போது உடனே...கிடைக்க....அவை என்ன...துரித உணவுகளா ?
*உணவுக்குக் கையேந்தலாம்......உறவுக்கு ?*

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு