சனி, 7 நவம்பர், 2015

வாழ்வின் நோக்கம்? …ஒரு ஆய்வு


நாம் பிறந்த காரணம் என்ன?
மற்றவர் மரணம் மற்றும் அகால மரணம் நிகழ்ந்தும்  …நம்மைக் கடவுள் நம்மை விட்டு வைப்பதன் நோக்கம் என்னவாக இருக்கக்கூடும்?
அப்படியென்றால் நம் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கக் கூடும்……பார்க்கலாம்:
- வாழும்வரை சுவாசிக்க வேண்டும் என்பதா?
- மூன்று வேளைக்கு உணவு தேட முப்பொழுதும்  அலைவதா?
- மற்றவர் செய்யாததை செய்ய முயன்று மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற கவனமே லட்சியமாக வாழ்ந்து மடிவதா?
- இனப்பெருக்கம் செய்வதா?
- அதில் இன்பம் கண்டபின்…விளைவுகளுக்கு விடுதலை தேடுவதா?
- சந்திர,சூரியனைஇரவு,பகலாக புரிந்து கொள்வது மட்டுமா?
- அல்லல் பட்டு அரைகிரவுண்டு வாங்கி…அதில் வாடகைக்கு விட வீடு பெறுவதா?
- எதிர்கால பயத்திற் கிணங்க அரை வயிறு உண்டு…கடைசிவரை சேமித்தே சாவதா?
- ஆசை ஆசையாய் கார் வாங்கி…தினம் தினம் துடைத்து அழகு பார்த்து…ஓட்டினால் செலவு என்று…ஆயுதபூஜை செய்து ஆராதிப்பதா?
- முயலும் காரியம் பிறரிடம் பகிர்ந்தால் முற்றுப் பெறாது என்ற மூட நம்பிக்கைக்குப் பயந்து…நம்நலம் விரும்பிகளிடமும் மறைத்து மறைத்து கவனமாக தூக்கமிழப்பதா?
- செலவுகள் நியாயமாக இருக்கவேண்டுமென்று…அநியாயமாய் பொத்திப் பொத்தி பொட்டியைப் பாதுகாப்பதா?
- அதனால்…,வழங்கப் பட்ட சிறகுகள் கொண்டும் …நடந்தே சிக்கணம் வெல்வதா?
- மூன்று வேளைத் தின்று…ஒரு வேளை ஒழுங்காகக் கழிப்பதா?
- இந்த மூன்று வேளை முக்கோண வாழ்வின் முழுமையறிய முயற்சியின்றி முடிந்தே…போவதா?……சிந்தனை …செய்…மனமே!

( This is not a forwarded msg. )

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு