ஒரு கவிதையின் கதை
ஒரு கவிதையின் க(வி)தை:
காலம்…துளித்துளியாய்ச் சொட்டிக் கொண்டேயிருக்கிறது…தாவரங்கள், உயிர்கள்,கிரகங்கள்,மனிதர்கள்…என்று! காலம் அவ்வாறு சிதறும் துளிகளைச் சேமித்து வைக்கக் கண்டறிந்த ஒரு அருமையான கலனே கவிதை!இறந்துபோனக் காலங்களின் உணர்ச்சிகளை உயிர்ப்பிப்பன கவிதைகள்!மரணத்தை நியாயப் படுத்தும் காலத்தின் முன் வாழ்க்கையை நியாயப் படுத்துபவைக் கவிதைகள்!காலம் இருள் கொண்டு பயமுறுத்தும்! இருளையே …குறைந்த வெளிச்சம் எனக் கூறி மனிதனை ஊக்குவிக்கும் கவிதை! கவிதை, மழலையின் கண்கொண்டு உலகைக் காணச்சொல்லி…ஞானியின் மனம் கொண்டு வாழச் சொல்லும்!புறக்கண்ணில் விஞ்ஞானம் கண்டவைகளை…அகக்கண் கொண்டுஆராய்ந்து அவைகளை ரசிக்கச் செய்வன…கவிதை!வாழ்வை வியக்கச் சொல்லிக்கொடுக்கும் இவை!பாசிப் படர்ந்த குளம் இவ்வுலகம்!அதன் நடுவே பூத்திருக்கும் வசீகரத் தாமரை…வாழ்க்கை!பாசி விலக்கி…தாமரைக் கொஞ்ச…வழி வகுக்கும் கவிதை!மனிதகுலம் பயன்படுத்தித் தேய்ந்த வார்த்தைகளில் கவிஞனுக்கு உடன்பாடில்லை!ஆகவே,கைக்கு சிக்கிய அந்த கருப்பு வெள்ளை வார்த்தைகளுக்கு…வண்ணம் தீட்டி அழகு பார்ப்பானவன்!வாழ்ந்து முடிந்த வலிகளை அசைபோட்டுப் பார்க்கும்போது அவையே அவனுக்கு வரமாகப்படுகிறது!விஞ்ஞானம் விளஙக்குவைத்துத் தேடுவதை…கண்கள் மூடிக் கண்டறிவது கவிதை!
வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு…தூரமும், இதயமும் சுருங்கிப் போன இந்த கணிணியுகத்தில்
நழுவிக் கொண்டிருக்கும் மனிதத்தை இறுக்கிப் பிடித்துக் கற்றுக் கொடுக்கிறது கவிதை!
வாழ்வின் வலி தாங்க…வானவில் ரசிக்க…புயலையும் பூகம்பத்தையும் எதிர்கொள்ள…சக உயிர்களை நேசிக்க…சேமித்தக் கண்ணீரை அன்புக்குச் செலவழிக்க…கற்றுத் தரும் ……ஆசான்……கவிதை! கவிதை!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு