வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஒரு பதினெட்டு மாடி கட்டிடம்.அதன் உச்சியில் வெள்ளை அடிக்கும் ஒருவன்.....தொங்கும் கயிற்று ஊஞ்சலில் அமர்ந்தபடி......இடது கையில் டப்பாவும்......வலது கையில் ஒரு ப்ரஷ்ஷூம் ! கீழிருந்து அவனை மேலே பார்க்கும் நமக்கே தலை சுற்றும்.அவனுக்கு?
அவன் என்ன கின்னஸ் சாதனையா புரிகிறான்?அன்றாட தொழிலல்லவா அவனுக்கு ! என் கண்கள் குளமானது !

 அது அவன் தொழிலா ? தினசரியா ? இதே போலவா ? மனம் கனத்தது ....... வலித்தது ! தன்னை நம்பி ஒரு குடும்பத்துக்காக......தினமும் ஆகாயத்தில் தொங்க வேண்டுமா ? உயிருக்கு உத்திரவாதம் இன்றி ....வீடு திரும்பும் வேலையா ?

இப்போது புரிந்தது ! அவனை இந்த அளவு தினமும் உயர்த்துவது .....அந்தக் கயிறு அல்ல......வயிறு !

புதன், 18 ஜனவரி, 2017

[1/18, 10:24 PM] kapun2002: *தெய்வம் கல்லானக் கதை*
( பொறுமையாக படிக்க முடிந்தவர்க்கு ) :

ஒருநாள் விடிகாலைப் பொழுது,தேவலோகத்தில் இறைவன் கண் விழித்தெழுந்தான் ! அவன் முகத்தில் ஒரு  வேதனை தெரிந்தது !
அதற்கு ,அவனது பக்தர்களும்,அவர்களது கோரிக்கைகளுமே காரணம் ! அத்தனை பேருக்கும் இறைவன் என்ற வகையில் இன்று பதில் சொல்லியாக வேண்டும் !
இந்த.... மத போதகர்கள்.... *திக்கற்றவர்க்கு தெய்வமே துணை*என்று பிரசங்கிறார்கள் ! அதை நம்பிக் கொண்டு இந்த அப்பாவி ஜனங்களும் ...நீயே கதி என்று என்னிடம் வந்து விடுகிறார்கள் ! நான் என்ன கதியில் இருக்கிறேன் என்பது எனக்குத்தானே தெரியும் !
[1/18, 10:24 PM] kapun2002: ஆமோதிப்பதுபோல் சிரித்தான் காலதேவன் ! நீ சொன்னதுதான் சரி, சிலையாக மாறிவிடு ! மனிதனுக்கு...கஷ்டத்தைக் கொடுக்க ஒரு காலம் வந்ததென்றால்........அதை நீக்கவும் ஒரு காலம் வரும் ! காலத்தின் கணக்கின்படியே சகலமும் நடக்கட்டும் என்று விட்டுவிடு!உனக்கெதற்கு நடுவில் ஒரு !
[1/18, 10:24 PM] kapun2002: அபிஷேகம்/அர்ச்சனை செய்,காணிக்கை செலுத்து ......இதை செய்தால் கடவுள் நீ கேட்பதைக் கொடுப்பார் என்றுவேறு நம்ப வைக்கிறர்கள் ! மக்களும் அதையெல்லாம் செய்துவிட்டு......என்னைக் கொடு....கொடு என்றால்....? அதற்கு நான் எங்கு.....போக !

அலங்காரம் செஞ்சேன்,அங்கப்பிரதட்சணம் செய்தேன்,ஆடை சாத்தினேன் என்றால்........நானா.....கேட்டேன் ! தேவையில்லாம....கடன் பட்டேன் ! இன்று கலங்குகிறேன் ! நான் என்ன .....வைத்துக் கொண்டா இல்லை என்கிறேன் ! மக்களைச் சொல்லிக் குற்றமில்லை...இறைவனிடமே இல்லை என்றால் ......யார்தான் நம்புவார்கள் !
இப்படி தனக்குத் தானே கடவுள் புலம்பிக் கொண்டிருந்தபோது...... *காலதேவன்* அங்கு வந்தான் ! பக்தர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் நிர்கதியாக.....கலங்கிய....கண்களோடு நின்ற கடவுளை....கருணையோடு....விசாரித்தான் ! மிகுந்த உருக்கத்தோடு இறைவன் விவரித்தான் ! காலதேவன் கடவுளுக்கு ஆறுதல் படுத்தி...சொன்னான் : இன்பமோ,துன்பமோ ....ஒவ்வொருவருக்கும் ,அவரவர் வினைப்பயனுக்கேற்ப அவர்கள் கருவிலேயே தீர்மானிக்கப்பட்ட ஒன்று ! சிரிக்கும் வரம் பெற்றவன் சிரிக்கிறான்....அழுகின்ற நேரம் வந்தவர்கள் அழுவார்கள் ! நீ காலத்தின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிதானே....தவிர....கட்டளையை மாற்றும் அதிகாரம் பெற்றவனல்ல ! இதைக் கேட்ட இறைவனுக்கு எரிச்சல் வந்தது .......அழுது கொண்டிருக்கும் பக்தனோடு.....நானும் சேர்ந்து அழுவதற்குப் பதிலாக ......நான் ஒரு கல்லாக,மண்ணாக ஒரு மூலையில் விழுந்து கிடக்க வேண்டியது தான் !
ஆமோதிப்பதுபோல் சிரித்தான் காலதேவன் ! நீ சொன்னதுதான் சரி, சிலையாக மாறிவிடு ! மனிதனுக்கு...கஷ்டத்தைக் கொடுக்க ஒரு காலம் வந்ததென்றால்........அதை நீக்கவும் ஒரு காலம் வரும் ! காலத்தின் கணக்கின்படியே சகலமும் நடக்கட்டும் என்று விட்டுவிடு!உனக்கெதற்கு நடுவில் ஒரு வேதனை ?
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த இறைவன்.....நீண்ட யோசனைக்குப் பிறகு.....என்ன நினைத்தானோ......எழுந்தான்......தன் ஆலயம் நோக்கி நடந்தான்.....உள்ளே சென்றான்......சிலையாக அமர்ந்து.....வேதனை மீண்டான் !

பக்தர் ஒருவர் ....அங்கம் நனைத்து.....பிரதட்சணத்திற்கு....அவசர அவசரமாக......தயாரானார் !

திங்கள், 16 ஜனவரி, 2017

*காய்கள் மட்டுமல்ல , காலம் கனியவும்....காத்திருத்தல் அவசியம்*

வானில் உதித்தப் பிறை நிலவு ....முழுமதியாவதும் , விதை முளைத்து செடியாவதும்.....காய் கனியாவதும்.......மழலைப் பிறப்பதும்....மறுநாளே நிகழ்வதில்லை !
பயணிக்க , பச்சை விளக்குக் காகவும் காத்திருத்தல் ......கட்டாயம் தேவை !
காத்திருக்கத் தவறினால்.....காலம் கூடக் கனிவதில்லை !
நிதானம்,காத்திருத்தல் வாழ்வின் ஓர் அங்கம் !

*உணவுக்குக்  கையேந்தலாம்.....உறவுக்கு ?*

மனிதன் தனியாக வாழமுடியுமா ? அவன் விழுந்தால் தூக்கிவிடவும்,சோர்ந்தால் ஆறுதல் சொல்லவும் ,அவனுக்குத் துணை வேண்டாமா ? கோடிக்கணக்கில் ஜனத்தொகை உள்ள இந்நாட்டில் ,அவனது தேவையறிந்து உதவ ஒரு மனம் கிடைக்குமா ? அதற்கு உத்தரவாதம் உண்டா ?

அதற்கு உறவுகள்  தேவை ! அதை உருவாக்க வேண்டும் ! அந்த நோக்கில் உருவாக்கப் பட்டவையே.... குடும்பங்கள் ! கூடிவாழும் பழக்கங்களும் உருவாக்கப் பட்டன !

 *கூடி வாழ்தலின் தொடக்கமே.....இந்த....திருமணங்கள் !*

சொந்தங்கள் இருவரில் ஆரம்பித்து  பிள்ளைகள்,மருமகள் மருமகன்,பேரக்குழந்தைகள் என உறவுகள் விரிவடைந்தன ! பெண்ணைக் கொடுத்து......எடுத்து.....சொந்தங்களில் ஓர் பிடிப்பு ஏற்படுத்தப் பட்டது ! இப்படியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையில் ....அனாதை எண்ணம் மறைந்து ஒரு சமூக பாதுகாப்பு அவனுக்குக் கிடைத்தது !

அந்தத் தத்துவமோ....இன்று தலைகீழாய்ப் புரண்டு போய்க் கிடைக்கிறது ! உறவுகள் உடைந்து போய் ....உலகம் சுருங்கிக் கிடக்கிறது !
சொந்தங்களை....தொல்லை என்கிறார்கள் ! பாசத்தை விலங்கு என்றும் ,தேவையில்லை எனவும் நினைக்கிறார்கள் ! பெற்றோரை பாரமாகக் காண்கிறார்கள் ! திருமணங்களில் .......அவனையோ,அவளையோ மட்டும்....தனியாக......உறவுகளை உதறிவிட்டு வரச்சொல்கிறார்கள் ! முதலிரவு வேண்டும் குழந்தை வேண்டாமாம் !

இன்று எல்லாருக்கும் வீடு இருக்கிறது ,ஆனால் குடும்பம் இல்லை ! சொத்து உண்டு,சொந்தங்கள் இல்லை ! பணம் இருக்கிறது பாசம் இல்லை ! மனம் உண்டு, அமைதி இல்லை !

இப்படி வாழும் மனிதன் துன்ப காலத்தில் மட்டும் ஆறுதல் தேடி அலைவதில் அர்த்தம் உண்டோ ? யாரிடம் சொல்லுவான் ? மருத்துவரிடமா ? மாத்திரையிடமா ? சொந்தபந்தங்கள் அப்போது உடனே...கிடைக்க....அவை என்ன...துரித உணவுகளா ?

*உணவுக்குக்  கையேந்தலாம்......உறவுக்கு ?*

திங்கள், 2 ஜனவரி, 2017

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:

எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.!

இந்தநாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் ...

எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்.

இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்"

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்.

ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.

ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது.

எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்.

எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.

அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.

ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதே வேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறை வைக்காதீர்கள்.

அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள்.

உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.

அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள்.

அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய மருமகனே…

இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.

அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன் ! நன்றி !