செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ரசித்த கவியரசு வரிகள்

[9/28, 10:26 PM] Puvanasekar Subramaniam: கருணை பொங்கும் உள்ளம்,
அது கடவுள் வாழும் இல்லம்!
கருணை மறந்தே வாழ்கின்றார்,
கடவுளைத்தேடி அலைகின்றார்!

[9/28, 10:33 PM] Puvanasekar Subramaniam: சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

[9/28, 10:37 PM] Puvanasekar Subramaniam: பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

மகளின் பிறந்த தினக் கவிதை!

எத்திக்கும் வியக்கவே,ரித்திக்கும் நீத்துவுடன் நாங்கள் யாவரும் ஆவலுடன் எதிர்நோக்கியத் திருநாள்! கருவரை தாண்டிக் கரூரில் கால் பதித்த உன்னத நாள்!   எழுந்த மழலைக் குரலால், ஏழுஸ்வரங்களும் ,ஏமாந்த அந்த அரிய நாள்! உதித்த ஆண்டோ ஏழும் ஏழும்! ஆக, அன்றுப் பிறந்தக் குழந்தைக்கு, இன்று பிறந்த தினம்! ஆண்டுகள் பல ஆடி ஓடி அந்தப் பெண் குழந்தை வளர்ந்து வளர்ந்துப் பிறகு தாரமாகித் தாயுமானாள்  கண்ணான இரு செல்வங்களுக்கு! அதிர்ஷ்டம் செய்த அமெரிக்க மண் அமெரிக்கப் பிரஜையாக்கிக் கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இது ,உலகமே ஓர் கிராமமாக சுருங்கியக் காலக் கட்டம்.அதனால் தூரம் ஒரு பொருட்டல்ல! வாழ்த்து சொல்ல   பறந்து நேரில் வந்தோம் ! எனினும் …ஒரே வீட்டில் வசித்த போதும் வாட்ஸப்பில் வாழ்த்துவது மரபு என்ற வழக்கப்படியும் வாழ்த்துகிறோம்! மகளே! மரகதமே! மங்கலம் பொங்கும் குடும்ப விளக்கே! தூய வெண்மைக்கு உதாரணமாகச்  சொல்லப்படும் தும்பைப் பூ வண்ணம் …வெண்மையே அல்ல உன் மனதின் முன்! மேலும் , பண்பட்ட உன் குணம் காண அண்ணாந்துப் பாக்குதே வானம்! வாழ்க! அன்பே, நீ குடும்பத்துடன் , நீளாயுள், நிறைசெல்வம்,நிம்மதி மற்றும் வளம் யாவும் பெற்று இனிதே வாழ்க !இந்தியாவுக்கு அடிக்கடி வருக! வருக!வாழ்க என மனமார வாழ்த்துகிறோம்!
WISH YOU A VERY HAPPY BIRTHDAY AND MANY MORE HAPPY RETURNS OF THE DAY !😃! -  கா.ம.க.

புதன், 23 செப்டம்பர், 2015

வைர வரிப் பாடல்


இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
க்ண்ணாடி பிம்பம் கண்ட கை ஒன்றுமில்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி நீ
ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணே
என்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உன்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து காயும் உன்தன் கண்களடி பல
உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
நியாயமா நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
மௌனமா மௌனமா? என்ன சொல்லப் போகிறாய்

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கவிப் பேரரசுவின் கற்பனை வரிகள்

அச்சச்சோ புன்னகை! ஆள் தின்னும் புன்னகை! அத்திப் பூ புன்னகை! கைக்குட்டையில்  நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன்! சிந்தாமல் சிதறாமல் முந்தானை ஏந்திக் கொண்டேன்! உன் புன்னகை எனும் சாவியே என் காதல் திறந்ததடி! நி வார்த்தையில் சொன்னக் காதலால் என் வாலிபம் மெலிந்ததடி! உனைக் கலந்தபின் நான் குளித்தக் கடல்நீர் இன்று குடிநீர் ஆனதடி!கவிதை,இதுக் கவிதை இன்னும் கற்பனை செய்வோமா?உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா? உன் நுனி விரல் தொட்டே என் உள்ளம் பதறுதடி, இனும் ஆழங்கள் தொட்டால் என் உயிரே சிதறுமடி!நீ தீண்டினால் உயிர் தூண்டினால் இங்கு பொஹ்ரான் வெடிக்கிறதே! பெண்ணுக்குள் இத்தனை சுகமா? அந்த ப்ரம்மனின் திறம் வாழ்க! என்னுள் தூங்கிய சுகத்தை எழுப்பிய உன் விரல் வாழ்க! அடியேகேளடி சுகவகை ஆயிரம் கோடியடி! கண்ணே கொஞ்சம் வளைந்தால் என் கற்பனை நீளுமடி!வெட்கத்தை உன் முத்தத்தால் சலவை செய்துவிடு! பெண்தேகம் ஒரு பேரோடு உன் பெயரை எழுதிவிடு!இரு உதடுகள் என் எழுதுகோல் வா அன்பே வளைந்து கொடு!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கள்ளிக்காட்டுக் கம்பன் கற்பனை வரிகள்


மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து
வீதியில் விட்டு விட்டார்
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலைப் பிடித்து ....

நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டார்
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலைப் பிடித்து ....

மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்
காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள் 

அருகம் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே!

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வியந்த கவி நயம் !

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா,கண்களுக்குச் சொந்தமில்லை!
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணை விட்டுப் பிரிவதில்லை!
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
(கண்ணோடு)

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்
(கண்ணோடு)
(சுவரங்கள்

ரசித்த பாடல் வரிகள்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
(பூவுக்குள்)

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)

பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)

வர்ஷாவின் 25 வது பிறந்த நாள் 14 செப்டம்பர் 2015

வருஷம் தோறும் பிறந்த நாள் காண்பவர் பலர்! ஆனால் இந்த வருஷம் பிறந்த நாள் கால் நூற்றாண்டு காண்பதால் வர்ஷாவுக்கு சிறப்புத் திருநாள்! அமெரிக்கா வந்து, சேவையில் அசத்தும் பெண்ணே,உன் அசாத்திய துணிச்சல் …ஒரு அதிசயமே! கற்பித்தலே கடமையாக கையாளும் பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் பெண்ணே!கடமையாகக் கற்பிக்கவே கடல் கடந்துப் போனாயோ?
ஆங்கில இலக்கணம் அனைத்தும் அறிந்ததில் ஆனந்தமே! அதையே அனைவரிடம் எதிர்பார்த்தால் தொல்லையே! அறிவாயோ, அமிர்தமே! நாற்பது வரை நன்றாக உண்ணவேண்டும் என்பது நாங்கள் சொல்லித் தெரிவதில்லை , நலமறியும் நங்காய்!போதுமே…போதனை என்று ஓசையிடும் நின்மனதின் மொழி நன்கறிவோம்! ஆகவே……வாழ்த்த வருகிறோம் ஏற்பாயே! சென்னையில் பிறந்த…செப்டம்பர் பதினாலே…செல்வமும் செழிப்புடனே அனைத்தும் பெற்று சீரும் சிறப்புடனே பல்லாண்டு நீ வாழ்க! வாழ்க! …என வாழ்த்துகிறோம்! WISHH……sorry, WISH YOU A VERY HAPPY BIRTHDAY !😃!!

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

விடுகதையா இந்த வாழ்க்கை

க.கா.கம்பனின் ,ரசித்த வரிகள்:

விடுகதையா இந்த வாழ்க்கை! விடைதருவார் யாரோ!
எனது கையென்னை அடிப்பதுவோ! எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ!
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ!
ஏனென்று கேட்கவும் நாதியில்லை! ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை!
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும்! காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் !(2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்!
நான் செய்த பாவம் என்ன! (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ!
வந்து விழுகின்ற மழைத்துளிகள்! எந்த இடம் சேரும் யார் கண்டார்!
மனிதர் கொண்டாடும் உறவுகளோ! எந்த மனம் சேரும் யார் கண்டார்!
மலைதனில் தோன்றுது கங்கை நதி !அது கடல் சென்று சேர்வது காலன் விதி!
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு! கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு !(2)
உறவின் மாறாட்டம்! உரிமைப் போராட்டம்!
இரண்டும் தீர்வதெப்போ! (2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே! ஒதுங்கக்கூடாது நல்லவனே!
தொண்டுகள் செய்ய நீயிருந்தால்! தொல்லை நேராது தூயவனே!
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய்! இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்?
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது, காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது ?(2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்,
நாங்கள் போவதெங்கே? (2)