செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கவிப் பேரரசுவின் கற்பனை வரிகள்

அச்சச்சோ புன்னகை! ஆள் தின்னும் புன்னகை! அத்திப் பூ புன்னகை! கைக்குட்டையில்  நான் பிடித்து கையோடு மறைத்துக் கொண்டேன்! சிந்தாமல் சிதறாமல் முந்தானை ஏந்திக் கொண்டேன்! உன் புன்னகை எனும் சாவியே என் காதல் திறந்ததடி! நி வார்த்தையில் சொன்னக் காதலால் என் வாலிபம் மெலிந்ததடி! உனைக் கலந்தபின் நான் குளித்தக் கடல்நீர் இன்று குடிநீர் ஆனதடி!கவிதை,இதுக் கவிதை இன்னும் கற்பனை செய்வோமா?உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா? உன் நுனி விரல் தொட்டே என் உள்ளம் பதறுதடி, இனும் ஆழங்கள் தொட்டால் என் உயிரே சிதறுமடி!நீ தீண்டினால் உயிர் தூண்டினால் இங்கு பொஹ்ரான் வெடிக்கிறதே! பெண்ணுக்குள் இத்தனை சுகமா? அந்த ப்ரம்மனின் திறம் வாழ்க! என்னுள் தூங்கிய சுகத்தை எழுப்பிய உன் விரல் வாழ்க! அடியேகேளடி சுகவகை ஆயிரம் கோடியடி! கண்ணே கொஞ்சம் வளைந்தால் என் கற்பனை நீளுமடி!வெட்கத்தை உன் முத்தத்தால் சலவை செய்துவிடு! பெண்தேகம் ஒரு பேரோடு உன் பெயரை எழுதிவிடு!இரு உதடுகள் என் எழுதுகோல் வா அன்பே வளைந்து கொடு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு