மகளின் பிறந்த தினக் கவிதை!
எத்திக்கும் வியக்கவே,ரித்திக்கும் நீத்துவுடன் நாங்கள் யாவரும் ஆவலுடன் எதிர்நோக்கியத் திருநாள்! கருவரை தாண்டிக் கரூரில் கால் பதித்த உன்னத நாள்! எழுந்த மழலைக் குரலால், ஏழுஸ்வரங்களும் ,ஏமாந்த அந்த அரிய நாள்! உதித்த ஆண்டோ ஏழும் ஏழும்! ஆக, அன்றுப் பிறந்தக் குழந்தைக்கு, இன்று பிறந்த தினம்! ஆண்டுகள் பல ஆடி ஓடி அந்தப் பெண் குழந்தை வளர்ந்து வளர்ந்துப் பிறகு தாரமாகித் தாயுமானாள் கண்ணான இரு செல்வங்களுக்கு! அதிர்ஷ்டம் செய்த அமெரிக்க மண் அமெரிக்கப் பிரஜையாக்கிக் கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இது ,உலகமே ஓர் கிராமமாக சுருங்கியக் காலக் கட்டம்.அதனால் தூரம் ஒரு பொருட்டல்ல! வாழ்த்து சொல்ல பறந்து நேரில் வந்தோம் ! எனினும் …ஒரே வீட்டில் வசித்த போதும் வாட்ஸப்பில் வாழ்த்துவது மரபு என்ற வழக்கப்படியும் வாழ்த்துகிறோம்! மகளே! மரகதமே! மங்கலம் பொங்கும் குடும்ப விளக்கே! தூய வெண்மைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் தும்பைப் பூ வண்ணம் …வெண்மையே அல்ல உன் மனதின் முன்! மேலும் , பண்பட்ட உன் குணம் காண அண்ணாந்துப் பாக்குதே வானம்! வாழ்க! அன்பே, நீ குடும்பத்துடன் , நீளாயுள், நிறைசெல்வம்,நிம்மதி மற்றும் வளம் யாவும் பெற்று இனிதே வாழ்க !இந்தியாவுக்கு அடிக்கடி வருக! வருக!வாழ்க என மனமார வாழ்த்துகிறோம்!
WISH YOU A VERY HAPPY BIRTHDAY AND MANY MORE HAPPY RETURNS OF THE DAY !😃! - கா.ம.க.
WISH YOU A VERY HAPPY BIRTHDAY AND MANY MORE HAPPY RETURNS OF THE DAY !😃! - கா.ம.க.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு