ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வர்ஷாவின் 25 வது பிறந்த நாள் 14 செப்டம்பர் 2015

வருஷம் தோறும் பிறந்த நாள் காண்பவர் பலர்! ஆனால் இந்த வருஷம் பிறந்த நாள் கால் நூற்றாண்டு காண்பதால் வர்ஷாவுக்கு சிறப்புத் திருநாள்! அமெரிக்கா வந்து, சேவையில் அசத்தும் பெண்ணே,உன் அசாத்திய துணிச்சல் …ஒரு அதிசயமே! கற்பித்தலே கடமையாக கையாளும் பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் பெண்ணே!கடமையாகக் கற்பிக்கவே கடல் கடந்துப் போனாயோ?
ஆங்கில இலக்கணம் அனைத்தும் அறிந்ததில் ஆனந்தமே! அதையே அனைவரிடம் எதிர்பார்த்தால் தொல்லையே! அறிவாயோ, அமிர்தமே! நாற்பது வரை நன்றாக உண்ணவேண்டும் என்பது நாங்கள் சொல்லித் தெரிவதில்லை , நலமறியும் நங்காய்!போதுமே…போதனை என்று ஓசையிடும் நின்மனதின் மொழி நன்கறிவோம்! ஆகவே……வாழ்த்த வருகிறோம் ஏற்பாயே! சென்னையில் பிறந்த…செப்டம்பர் பதினாலே…செல்வமும் செழிப்புடனே அனைத்தும் பெற்று சீரும் சிறப்புடனே பல்லாண்டு நீ வாழ்க! வாழ்க! …என வாழ்த்துகிறோம்! WISHH……sorry, WISH YOU A VERY HAPPY BIRTHDAY !😃!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு