புதன், 21 அக்டோபர், 2015

தன்னம்பிக்கைக்காக

.
பூப்பூக்கும் சத்தம் கேட்டேன்!புல்லின் மீது பனித்துளி ஒன்று புரண்டு படுக்கும் ஒசைக்கேட்டேன்!என்னைச் சுற்றிச் சத்தம் கேட்டேன்!எந்தன் மனதின் மௌனம் கேட்டேன்!உலகம் பூட்டிய இரவுகள் இருக்கு!உதய சூரியனே…தங்கச் சாவி நமக்கு!திறக்கும்படி கல்லைத் திறந்தால் …சிலை ஒன்று காணலாம்!திறமைகள் கொண்டால் சிறை கொண்டப் புழு…சிறகு முளைத்துப் பறவையாகலாம்! ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு திறமை இயற்கையின் கொடைதானே!மழைத்துளி நடுவே நனையாமல் பறக்கும்  பறவை …கொசு…ஒன்றுதானே!
அதற்கே திறமை அவ்வளவு என்றால்……எனக்கும் திறமையுண்டு…வாழ்ந்து காட்டியே……வாழ்வின் வண்ணம் ரசிப்பேன்!!

மகிழ்வூட்டும் எண்ணம் மட்டும் ஏற்பேன்! ரசிக்கவே வாழ்க்கை…அதற்கே மனம் வளர்ப்பேன்! பூஜைநாளும்…அதற்கு உதவட்டும்! வாழ்த்துக்கள்!!😃.

புதன், 14 அக்டோபர், 2015

எங்கள் வாட்ஸப் குடும்பம் !

எங்கள் குடும்பமோ…எளியதோர்க் குடும்பம்! எங்கள் வீடோ…விண்மீன்கள் வந்து விளையாடும் மாடம்!அன்பென்ற வேதம் இசைபாடும் கூடம்!எங்கள் விருப்பம் இங்கே கிடைக்கும்! தாய்தந்தை தவிர எல்லாமே பெறுவோம்!கழுத்துவரை ஆசைகளைப் புதைத்தபடி வாழ்வோம்! நாங்கள் கனவுகளில் நீர் குடித்துத் தரையில் வாழும் மீன்கள்!மடியில் பிறந்த நதியைப் போல் எதையும் மறைத்து வைப்பதுமில்லை!செடியில் மலரைச் செடிகள் போல் சிறை வைப்பதுமில்லை!மேகம் தனித்து மழையாய் அங்கங்கே பொழிந்தது போல்  வந்தும், கடல்நீர் போல கலந்து சேர்ந்து ஒன்றாய் வாழ்வோம்! இதைக் கண்டு கண்டு கடவுளும் ஆசை கொண்டு,எங்களோடு தங்கிப்போன காரணத்தால்…கோயில்களில் எஞ்சியதோ…சிலைகள் மட்டும்!!
-  கா.ம.க.

திங்கள், 12 அக்டோபர், 2015

காட்சியளித்தாரா? கடவுள்!

கடவுளைக் கண்ணால் காணவேண்டுமா? கண்டிப்பாகக் காணலாம்!
……இயற்கைப் பிரிக்கும்வரை…இறைநிலை வாழ விட்டிருக்கும்வரை…இயற்கை வழங்கிவரும் வாழ்வின் இனிமை ……உன்னால் குறையவில்லையா?
……ஒன்று செய்! முகம் பார்க்கும் கண்ணாடி முன் நில்! நேரில் ஜீவனோடு காட்சியளிக்கிறாரா…கடவுள்?மறைபொருள் தேடியலைந்த…மடையா……நீதாண்டா  அந்த கடவுள்! ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆனால் அதுவே நிஜம்!
வாழ்வின் இனிமை சேர்க்க எல்லாம் நீ முயற்சிக்க வேண்டியதில்லை! இனிய வாழ்வே இயற்கை! அதை நீ கெடுக்காத வரை…நீயே கடவுள்!அதற்கு நீ உத்திரவாதமானால் உன் பூஜை அறையில் தேவை ஒரு கண்ணாடியே!
கண் முன் தோன்றுவார்க் கடவுள்!அன்றாடம்!
- இது Forwarded message அல்ல! இதனால் ஏற்படும் விளைகளுக்கு…நானே பொறுப்பு!
- அன்புடன்…கா.ம.க!