எங்கள் வாட்ஸப் குடும்பம் !
எங்கள் குடும்பமோ…எளியதோர்க் குடும்பம்! எங்கள் வீடோ…விண்மீன்கள் வந்து விளையாடும் மாடம்!அன்பென்ற வேதம் இசைபாடும் கூடம்!எங்கள் விருப்பம் இங்கே கிடைக்கும்! தாய்தந்தை தவிர எல்லாமே பெறுவோம்!கழுத்துவரை ஆசைகளைப் புதைத்தபடி வாழ்வோம்! நாங்கள் கனவுகளில் நீர் குடித்துத் தரையில் வாழும் மீன்கள்!மடியில் பிறந்த நதியைப் போல் எதையும் மறைத்து வைப்பதுமில்லை!செடியில் மலரைச் செடிகள் போல் சிறை வைப்பதுமில்லை!மேகம் தனித்து மழையாய் அங்கங்கே பொழிந்தது போல் வந்தும், கடல்நீர் போல கலந்து சேர்ந்து ஒன்றாய் வாழ்வோம்! இதைக் கண்டு கண்டு கடவுளும் ஆசை கொண்டு,எங்களோடு தங்கிப்போன காரணத்தால்…கோயில்களில் எஞ்சியதோ…சிலைகள் மட்டும்!!
- கா.ம.க.
- கா.ம.க.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு