ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தன்னம்பிக்கை மருந்து!

காற்றுக்கொரு ஜாதியில்லை!கடவுளின் மதம் என்ன தெரியவில்லை! ஆக, உயிர்களில் பேதங்கள் தேவையில்லை!அது நீதியில்லை! நாளை ஒரு பூ மலரும்!நம்பிக்கை இருந்தால் நன்மை வரும்! பாறைக்குள் இருக்கின்ற தேரைக்கும் உணவைப் படைத்தவனே…ஊருக்கும் உலகுக்கும் உனக்கும் உணவைப் படைத்திருப்பான்! நீ செல்லும் பாதையில் ஆயிரம் மலர் விரிப்பான்!நீ வாழவே!
உலகம் பிறந்தது உனக்காக! சூரியன் உதிப்பது எதற்காக? கண்ணா…எல்லாம்……உனக்காகவன்றோ! ஏனிந்த ஐயம்? உன் பணி மட்டும் செய்வாயா? வாழ்க்கை என்றும் அவ்வளவே! வாழ்க வளமுடன் நன்றே!!😀

புதன், 19 ஆகஸ்ட், 2015

வியந்த…பாடல் வரிகள் !

காதலின் அவஸ்த்தை எதிரிக்கும்  வேண்டாம் ! மரண சுகமல்லவா! நெருப்பை விழுங்கி விட்டேன் ! அமிலம் அருந்தி விட்டேன் ! காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள்  பூமிக்கு  வருவதில்லை ! மீறி அவன் பூமி வந்தால் …தாடியுடன்தான் அலைவான்  வீதியிலே!

அன்பே! அன்பே! கொல்லாதே ! கண்ணே  கண்ணைக்  கிள்ளாதே !
பெண்ணே       புன்னகையில் இதயத்தை    வெடிக்காதே!
உன் அசைவினில்   உயிரைக்   குடிக்காதே!
பெண்ணே   ,   உனது  மெல்லிடைப்      பார்த்தேன்  ,  அடடா   பிரம்மன் கஞ்சனடி! சற்றே   நிமிர்ந்தேன்  
தலைசுற்றிப்  போனேன்        ஆஹா அவனே…வள்ளலடி!
மின்னலைப் பிடித்து தூரிகை    சமைத்து ரவிவர்மன்எழுதிய  உருவமடி! நூறடிப் பளிங்கை    ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய   வதனமடி!
இதுவரை மண்ணில் பிறந்தப் பெண்ணில் நீதான் நீதான் அழகியடி! இத்தனை அழகும் மொத்தம்   சேர்ந்து   என்னை      வதைப்பது கொடுமையடி      !

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஆகஸ்ட் 15 ,2015

நான் அமெரிக்கா சென்றிருந்த போது……என்னுடன் சகோதரி பேச விரும்பியதாக  அறிந்து………

சோ……உன்னையும்,உடன்பிறப்பையும் நினைக்கும் போது……வானம் தரையில் இறங்கி வருதே!பூமி நிலவில் புகுந்து கொள்ளுதே!திசைகள் யாவும் திரும்பிக் கொள்ளுதே!தென்றல் பூக்களில் ஒளிந்து கொள்ளுதே! ………எதிர்மறைகள்… எட்டி ஓடுதே! மல்லிகை மணம் மதுரை தாண்டுதே! பெண்கள் பெருமை பாரதியை எழுப்புதே!அன்பின் அர்த்தம் கண்டு அகராதி வியக்குதே!மருத்துவர் உதயம் மண்ணுக்குப் பெருமையானதே!வாழும் கலை…வரமாய் ஆனதே!

ஞாபகம் இனிதே! தூரம் மறையுதே! பேசத் தோணுதே!
பேசுவோம் நாளையே! வாழ்க!