நிலா :
நான் ஒன்றும் நிலாவிடம் கடன் வாங்கவில்லை!கண்டவுடன் ஓடி ஒளிந்து கொள்ள!
நிலாவை ரசிக்கப் பிறந்தவன்! அதை அறிந்த அம்மா, அன்றே , நிலாக் காட்டிதான் சோறூட்ட முயன்றாள்! வளர்ந்தபின் நமக்கு நிலாச் சோறெதற்கு? நிலவே சோறு நமக்கு!
நிலவை முத்தமிடத் தடையேதுமில்லையே!கண்களின் வழியே அருந்தும் மது நிலா அல்லவா! புலன்களை வருத்தா போதை கிடைக்குமல்லவா!நிலா ஒரு இயற்கையின் ஆசீர்வாதமல்லவா!அது ,ஒரு வார்த்தை கவிதையல்லவா!விஞ்ஞானம்,நிலவை ஒரு பாலைவனம் என்கிறது! காற்றில்லா மேடுபள்ளம் என்று கணிக்கிறது!மறக்கப் படவேண்டிய நிஜம்!
பருகும் பால்,பசுவின் ரத்தமென்பது நிஜம்!இந்த உடம்பு,தண்ணீரும்,தாதுக்களும்,உடையும் எலும்புகளும்,அறுந்துவிடும் நரம்புகளும்,அழுகிவிடும் சதையும் கொண்டது நிஜம்!பாசமும்,காதலும் ,நிஜம் மறக்கப் படுவதால்தானே! ஆக ஆன்மா இல்லாத விஞ்ஞான நிஜத்தை மறப்போம்! ஆனால் நிலவின் நிறம் நிஜம்!அது ஏற்படுத்தும் கிளர்ச்சி நிஜம்! உனக்கென துணை புரியும் நிலா,நீ அனாதையல்ல என்றே கூறும்!நிலவின் குளிர்ச்சி உணர்த்துமே தத்துவம்!வளர்ந்து,வளர்ந்து பௌர்னமியாகி,முழுமையடைவதும் , சாத்தியமாவதே எனக் கூறவில்லையா?
நிலவை ரசிப்போம்,கற்போமாக! வாழ்க நிலா!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு