நாங்கள் யார் தெரியுமா?
நாங்கள் கழுத்துவரை ஆசைகள் வளர்த்து, கனவு நீரில் நீந்திக் கொண்டு ,தரையில் தவித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கும் உல்லாச மீன்கள் !மேகம் ஆங்காங்கே தனித்து மழையாகப் பொழிந்த போதிலும்,ஓடிச் சென்று கடலில் கலந்து ஒன்றாக வாழ்ந்துக் காட்டினாலும்....அது எங்களை ,பாதிக்காத வகையில்,தனித்தனியாகவே வாழ்ந்து கொண்டு,தனிமையில் இனிமை காணத் தெரிந்தவர்கள் நாங்கள்!எங்கள் வழி .....தனி... ..வழி!
வீட்டைச் சுற்றி நீரோடை இருக்கும் போதும்....தாகம் வரும் போதெல்லாம் வானத்தையேப் பார்த்துக் பழகியவர்கள் நாங்கள்!எங்கள் வாழ்க்கை மூளையோடும்,வயிரோடும் முடிந்து போனால் என்ன?இதயம் நோக்கி ஏன் உயர வேண்டும்?பொற்காலச் சிகரத்தில் ஏற ,புஜம் கொடுக்க எத்தனிக்கும் மரச்சுற்றமே....கற்காலப் பள்ளத்தில் கிடந்தே மடிவதெங்கள் லட்சியமென்று தெரியாதா?மடிநிறையத் தங்கக் காசுகள் இருந்தும் பிச்சைக்கார வாழ்வில் உள்ள சுகம் பற்றித் தெரியுமா?
எங்கள் உலகம் ஒரு தனித்தீவு!அது எங்களுக்காக மட்டும் படைக்கப் பட்டது! இவையெல்லாம் எப்படிப் புரியும் மற்றவர்க்கு?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு