சுமக்க முடியா.....சிலுவை! ஒரு கண்ணோட்டம் !
இந்த நாட்டில் பலருக்குக் காதலிக்கத் தெரிந்திருக்கிறது! ஆனால் சிலருக்குத்தான் காதலை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது!இங்கு எத்தனையோ காதல்கள் விதைக்கப்பட்ட மறுநாளே புதைக்கப் பட்டு விடுகின்றன!பலப் பூக்கள் கல்லறைகளில் விழுவதற்கென்றேப் பூக்கின்றன! பல கனிகள், கனிகின்ற அவசரத்தில் வெம்பி மறைகின்றன!அதற்குக் காதலர்கள் மட்டும் காரணமல்ல! ஒரு விதை முளைக்க..எப்படி மண், ஈரம், காற்று, வெப்பம் ஆகிய நான்கும் தேவையோ, அதைப்போல, ஜாதி, பொருளாதாரம், மதம், மரபு ஆகியவற்றில் எந்த ஒன்று குறைந்தாலும் காதல் கற்பத்திலேயே கரைந்து விடுகிறது!இந்தக் கவிதையின் நாயகியும் காதலை ஏற்றுக் கொண்ட போதும், கடைசியில் காதலனை ஏற்றுக் கொள்ள முடியாத கட்டாயத்தில் காதலனையே இழக்கிறாள்! பருவம் எனக்குக் காதல் எனும் சிறகைத் தந்தது! ஆனால் யதார்த்த வாழ்க்கை அந்த சிறகுகளைக் கத்தரித்தது!கால்களில் லாடங்களோடு என்னால் உன்னோடு ஓடிவர முடியாதே ....காதலா! இப்படித்தான் இந்தியாவில் பலக் காதலர்களுக்கு ...உன்னைக் காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாகவும் என்னை மறந்துவிடு என்பது தேசிய கீதமாகவும் ஒலிக்கிறது! யதார்த்தமும், அழுத்தமும்,படிமங்களும்,குறியீடுகளும், கொண்ட இந்த உயிரூட்டக் கவிதையில் லட்சக்கணக்கான இளைய இதயங்களின் துடிப்பு ரகசியமாய்க் கேட்கிறது! இதோ கவிதை உங்களுக்காக.....: " சுமக்க...முடியாச்....சிலுவை".:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு