காதலும் கற்று மற!
ரம்பையா? அவள் என்ன.......அவளைப் படைத்தபின் பிரம்மன் கைகழுவும் நீருக்காக காத்திருந்த தாமரைகள்..... பூத்துக்குலுங்கும் அளவு அழகி என்ற நினைப்பா......? த்தூ.........! இருக்கும் தாமரைகள் குளத்தில் இன்னும் மடியாதிருந்தால்...போதாதா....! மானுடா......சுதாகரித்துக்கொள்.! மனதைத் தெளியவைத்துக்கொள்! நீதெளிந்தால்...... காற்றுக் கைகட்டி மண்டியிடக் காண்பாய் ! சூரியன் எழ....உனை அனுமதி கேட்டு எழக் காண்பாய்!தென்றல் சட்டைக்குள் சடுகுடு விளையாட உணர்வாய்! மழைவாசரனை மனதை வருட ரசிப்பாய்! இந்தக் குடுப்பினை இன்னும் வேண்டாமா? யோசி! விதைக்கப் படும்போதே.....புதைக்கப் படக்கூடிய எண்ணங்களுக்கு இடமளிக்காதே! தரணியில் ,மேலை நாடுகளில கல்யாணத் தோல்விகள் அதிகம்! தமிழ்நாட்டில் தோல்விகளுக் கென்றெ உருவாகின்றன இந்தக் காதல்! இது தேவையா? இந்தியாக் காதலுக்கான பூமி! காதலர்களுக் கானதல்ல! புரிந்து கொள்! தெரிந்து வாழ் ! ...............சும்மா.........டமாஸா.......ஒரு.....கற்பனை! இது எப்டி இருக்கு ? !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு