திங்கள், 20 ஏப்ரல், 2015

தீயிலும் கொடிய தீ! ஜாதி!

சாதிக்கப் பிறந்த மானுடத்தை சாதிக்குள் பாகுபடுத்தி மலிவாக்கி மகிழ்ச்சி கொள்ளும் கூட்டம்! மனதை விசாலப் படுத்த முயலாமல் , மயானத்தை விரிவாக்கி எக்காளமிடும் இரண்டு கால் விலங்கினம்! எரியாத அடுப்புடன் நாளும் மன்றாடும் ஏழையின் குடிசைக்கே நெருப்பு வழங்கும் வள்ளல்கள்! இந்த ஜாதிக் கத்தி எதிர்த்தவனை அழிப்பது மட்டுமல்ல எடுத்தவனையும் ஒழிக்குமென்பது தெரியாதா? ஜனத்தொகை விடவும் பிணத்தொகை கூடினால்....இனத்தொகை என்னாகும் ? எந்த மனித இனம் ஜாதி அடிப்படையில் நிறம், குணம், ரத்தம், உருவத்தில் வேறுபட்டன? சிந்திக்க வேண்டாமா ? உலகம் ஒரு பக்கம் விண்ணைத் துளைத்து விடியவைக்கும் அளவு உயரே! நாமோ பூமியைத் துளைக்கும் புழுக்களாக கீழ்நோக்கி கீழ்நோக்கி சிந்தனை வறட்சியுடன்! உலக மானுடம் மாற்று கிரகம் செல்ல சிறகு தயாரிக்கிறது! நாமோ இருக்கும் உடைகளையும் களைந்து பின்னோக்கும் நாகரிகத்தில் நரகம் நோக்கி...ச்சீ...வெட்கம்! இங்கு வளர்ந்து வரும் ஜாதிகள் நடுவே...தொலைய இருப்பது மனித ஜாதியே! இப்போது தேவை தீப்பந்தம் ஜாதி எனும் சடலம் எரிக்க! இன்னும் ஆயுதம் தேவை வகுப்புவாத ஆணிவேர் அறுத்தெறிய! வெண்புறா தேவை ! அவை திரும்ப திரும்ப ....தெற்கிலும்....தேவையான .... இடங்களிலும் பறந்து கொண்டிருக்கவே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு