வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பிரிவின் பெருமை!

பிளந்தால் அணுகொண்ட ஆற்றல் தெரியும்!
கொஞ்சம் பிரிந்தால் மெய்க் காதல் மேன்மை புரியும்!
எரியாத மெழுகுக்கு ஒளி இல்லையே!
பிரியாத உறவுக்குப் பலம் இல்லையே!
உதடு பிரியாமல் ஒரு சொல் இல்லையே!
உடலைப்  பிரியாமல் உயிருக்குப் பிறப்பில்லையே!
கரம் பிரியாமல் ஒரு செயல் இல்லையே!
கரை பிரியாமல் ஒரு நதி இல்லையே !
இமைப் பிரியாமல் ஒரு காட்சி இல்லையே !
இரவுப் பிரியாமல் ஒளி கொண்டப் பகலில்லையே !
காலைக் கதிரவன் கடல் விட்டு எழுவதும் ,
மாலைக் கதிரவன் மலை தொட்டுப் பிரிவதும்,
இயற்கை இயற்கை இயற்கையடி!
கடல் விட்டு முகில் பிரிந்தால் மழை உறுதி!
காற்று விட்டு சுரம் பிறிந்தால் இசை உண்டு!
தறியோடு இழை பிரியும் உடையாகவே!
தளிரே நம் பிரிவெல்லாம் உறவாகத்தான்!
உறவு பலம் கூடத்தான்! மெய்க் காதல் மேன்மை புரியுமே பிரிவினாலே!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு