புத்தாண்டு புதிதாய்
புத்தாண்டு புதுசு !
வருடா வருடம் வந்து போகும் புது வருடம்! நம்மிடம் புதிதாய் என்ன ஒன்றைக் கண்டோம் என்பதே , வருடப் பிறப்பில் பொலிவு சேர்க்கும் புதிதாகவே! திறந்த புத்தகமாய் மனதைத் திறந்த வெளிப்படை வாழ்வில் வெளிச்சம் கூடும், மனமும் வெளுக்கும்! கருவறைக்கும் கல்லறைக்கும் நடுவில் வாழும் வாழ்க்கை நிரந்தறமாக நினைவில் தோன்றும்! பிறப்பில் வந்த வெறுங்கையோடே இறப்பிலும் செல்வதே உலகறிந்த உண்மை! இடைப்பட்ட வாழ்வில் செழிப்பாய் வாழ்ந்தால் இறப்பும் இனிமையாகும்! ஏழையாய் பிறப்பது எவன் கையிலுமில்லை! ஏழையாய் வாழ்வது எவன் செய்யும் பாவமோ? நினைவினில் செழுமை கொண்டால் வாழ்வும் செழுமை காணும்! பாறையின் நடுவே பதுங்கியே வாழும் தேரைக்கும் கூட படைத்தவன் பசி தவிர்ப்பான்! மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் நம்பிக்கை கொண்டால்....எதிர்கால பயங்கள் எட்டியே ஓடும்! மழை வந்தால் குடை விரியும் எது வந்தால் மனம் விரியும்? குவளை நீர் சில மணி காணும்! குடம் நீர் நாள் காணும்! குளம் நீர் வருடம் காணும்! உன் மனம் குவளையா? குடமா? குளமா? அல்லது குளப்பமா? எண்ணுவீர் இத்திருநாளில் இன்றே! எஞ்சிய வாழ்வினில் எண்ணங்களும் புதிதாய்ப் பிறக்கட்டும், வருடம் போலவே! வருடா வருடம் தானாய் வயது கூடும்! நம் முயற்சியில் நம்மிடம் கூடியதெது என்பதே நம்மைக் காட்டும்! அனுபவம் உணர்த்திய பாடம் எல்லாம் உணர்வாய் அழகாய் கொட்டிவிட்டேன்! பயன்தருமானால் பயனடைவீர் நன்றே! அனைத்து வளங்களும் அநேகம் பெருவீர்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நன்றியுடன் - கா.ம.க

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு