தையலும் ! தைப்பவளும்!
ஊர் கிழிசலையெல்லாம் எப்பவுமே தைக்கிறவ நான் !
என் வாழ்வின் கிழிசலத் தைக்க எங்க போக நான்!
உறவுக்காக ஏங்கித் தவிக்குதே எம் மனசு!
என் வாழ்க்கை என்றுமே ஒரு புது தினுசு !
கண்ணான கண்ணே ஒன்ன என்ன சொல்லித் தாலாட்ட?
குடமாக் கண்ணீரு வச்சிருக்கேன், கண்ணே உன்ன நீராட்ட!
அம்மான்னு சொல்லாட்டி அன்பே ஒண்ணும் பரவாயில்ல!
அப்பாவும் உனக்கு இங்க நான்தான் என்னன்னு நான் சொல்ல!
எல்லாமே சொந்தம்தானே, யாருக்காக வாதாட !
இத்துப் போனக் கந்தலுக்கு, எந்த தையல் நான் போட !
விட்டுக் குடுத்து வாதாடவா, இல்ல பொட்டுக்காகப் போராடவா !
அங்காள அம்மனுக்குப் பொங்க வெச்சு மாளாது!
மங்காத்தாக் கண்ணீருக்கு , மாடக்கொளம் காணாது !
ஆத்தாடி இந்தச் சொந்தம் வந்ததெல்லாம் யாரால!
பாவிமக நெஞ்சுக்குள்ள பால்சுரக்குதே உன்னால !
என் கதை எழுதப் போனா, எட்டு ராமாயணம் போதாது !
இதிகாசக் கண்ணகி, சீதைக் கெல்லாம் இந்தக் கதி நேராது !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு