காதலி! காதல் மற!
காதலும் கற்று மற !
காதல்! என்று சொல்கிறபோது குற்ற உணர்வு வேண்டாம்! அது பழிச் சொல் அல்ல! அழகு தமிழ் மொழிச் சொல் அது! காதலுக்கு வக்கீல் தேவையில்லை! உனக்காக மற்றவர் கனவுகாண முடியுமா? அல்லது உனக்காகத் தான் வேறொருவர் சுவாசிக்க முடியுமா? இது உன் கனவு! உன் சுவாசம்! உன் காதல்! நீ நேசிக்கும் அவனோ, அவளோ உன்னை நேசிக்க வேண்டும் என்கிற கட்டாய மில்லை! நீ காதலி ! உனது கண்களை மூடி இரு புருவ மத்தியில் அவளை/ அவனை நிருத்து ,
உடலும் உள்ளமும் ஒரு புள்ளியில் சந்தித்து ஒரு பூப்பூக்கிறதா? அந்தப் பூவே காதலெனக் கொள்! அப்படியில்லையா, அந்த எண்ணத்தையே அடியோடு கொல்!
நாட்கள் நீளம் குறைவதைக் காண்பாய்! மற்ற வேலைகளுக்கு நேரம் கிட்டும்! தலை கலைந்தாலும் அது உன்னை பாதிக்காததை உணர்வாய்! ரேஷ ன் கடைக்கும் விரும்பியே போவாய்! தாடி வளர்ந்தால்...தேடி ஒழிப்பாய்! வாழ்வு அர்த்தப் படும்! காலத்தால் நகைக்கப் படுவதே காதல் உணர்வென்பதை உணர்வாய்! வாழ்வை நேசிப்பதில் அர்த்தத்தைக் காண்பாய்! மேகமே காகிதமாய், நீலவானம் பிழிந்து மைகொண்டு, கனவில் தொல்லைதரும் காதலிக்குக் கவிதை எழுதிய நேரம் உருப்படியாய் ஏதாவது செய்வது நன்றென்று புரியும்! .......வாழ்க!
வாழ்க வையகம் !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு