வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அழகின் அருமையை அள்ளி வழங்கும் அந்த கிராமம்! நகரத்தைத் துப்பி நகர்ந்த சிட்டுக் குருவிகள் இசை பாடும் இங்கே! பறவைகள் களிப்புடன் பறந்தும், விளையாடும் சூழல்! அந்தி வந்தும் நகர மறுக்கும் நிழல்கள், அழகிய பூக்களின் வண்ணங்கள் வாசனையோடு! ஒற்றைக்கால் தவமிருக்கும் ஒருநூறு தென்னை மரங்கள்! அதோ அங்கே,  தம்மை வளர்த்த மண்ணின் நலத்தை விழுதுகள் கொண்டு விசாரிக்கும் ஆலமரங்கள்! தூரத்து வயல்களில் ....தொலைந்து போன தங்கள் வாழ்க்கையை , நிலங்களில் குனிந்தபடி நிமிராமல் தேடும் நிரந்தரக் கூலிகள்! மற்றும் சேற்றுச் செருப்பணிந்து வரப்புகளில் ஒயிலாக நடைபயிலும் வயல் மயில்கள்!
காணக் கண் கோடி வேண்டும்! மாசில்லாக் காற்றைக் காசில்லாம  சுவாசிக்க இன்னும் மூக்கு இருந்திருக்கலாம் என்றே தோன்றும்!
அந்த...கிராமத்தை.....ஒரு முறையேனும் சாவதற்குள் சந்திக்க ஏங்குமே ஏக்கம்.....அது...நியாயம்தானே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு