சனி, 4 ஏப்ரல், 2015

கீற்றா? கீதமா?
ஓ.....நீர்......மகாத்மாவா? அந்த ஐந்நூறு ரூபாய் நோட்டில் புன்னகைபூப்பவர்தானே! திரையரங்குகள் தேசியகீதத்தைப் புறக்கணித்த மாதிரி , உன் சீடர்கள் உன்னையும் நிராகரித்தப் பிறகு....என்ன ஆயிற்று தெரியுமா? மலிவுப் பதிப்பாக வந்த உன் சத்திய சோதனைப் பதிப்பு, ராத்திரிப் புத்தகங்களின் இலவச இணைப்பாகும் நிலை அறிவாயா? நீஅக்டோபரிலும் ஜனவரியிலும் மட்டும் நினைக்கப் படுவது தெரியுமா? மாதச்சம்பளக்காரன் மாதக்கடைசியை நினைப்பது போல , உன்னை நினைவில் கொள்வதும் ஒரு வித சிரமந்தான்!
உன்தேகம் துளைத்த துப்பாக்கிக் குண்டை அப்போது உன் கடைசிச் சாம்பலில் கண்டெடுத்தார்களாம்! ஆனால் இப்போது முன்னேற்றம் என்ன தெரியுமா? நிகழும் துப்பாக்கிச் சூடுகளில் , சுட்ட  உடலில் தோண்டி எடுத்தால் ....ஒரு கனரகத் தொழிற்சாலை துவங்க தேவையான கச்சாப் பொருள் கிடைத்துவிடும்!
நீ போட்டக்கணக்கெல்லாம் பொய்த்தே போனதால் ....உன்னை...உன் நினைவு நாளில் மட்டும் நினைப்பதே நியாயம்!
ஒரே ஓர் ஆறுதல்......நகரத்து மகளிர்......உன்னை எப்போதும் ......நினைவு படுத்தியே புண்ணியம் பெறுவர்........உன்னைப் போல் அரை ...ஆடை.....அணிந்தே...!! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு