மே8
மே8 :
உலகம் அறிந்த திக்கு எட்டு !
டிபிஎஸ் குழாம் மறவாத தினம் மே எட்டு !அன்னை சரசுவதி நினைவு தினம் !
அவள் அறிந்த அகிலம் , ஆறு பிள்ளைகள் நாங்கள் ! நாங்கள் வளர வளர , அவள் தேய்ந்து , கரைந்து காணாமல் போனாள்......ஐயகோ !
அவள் ஒரு துரையைக் கைப்பிடித்து ...... எங்களைக் கரை சேர்க்கப்பட்ட பாடு......எழுதாத வரலாறு !
படிக்காத அந்த மேதை பெயரோ படிப்புக்கு சொந்தம் காணும் கடவுள் பெயர்....... கலைமகள் எனும் சரசுவதி !
கிழக்கு மேற்காக மட்டுமே ஒளிகொடுக்கும் கதிரவன் அறியாதது.......எங்கு உதித்தால் எங்களுக்கு வெளிச்சம் என்று அவள் அறிந்த ஒன்று !
அவள் வியர்வை துடைக்க எங்கள் விரல் வளர்ந்த நேரம்.........விரல் உண்டு..........வியர்வை எங்கே ! ஐயகோ !நேற்று வரைப் புன்னகை...... இன்று வெறும் புகைதானா ? ஐயகோ.......!
அவளை உணராத காலம் , அவள் வாழ்ந்த காலம் ! அவள் அருமை உணர்ந்த காலம் , அவள் கரைந்து மறைந்த காலம் !அவள் இமயம் கட்டி இழுத்த இழைகளில் நெய்தது எங்கள் மானம் மறைக்கும் ஆடைகள் !நான்கு சுவர் நடுவே மூட்டை கட்டிய இருளில் முழு ஆயுளையும் தொலைத்தவள் ! ஒருவேளை உணவை தயாரித்து பரிமாறி முடியுமுன் மறுவேளை வந்ததால் இடைவேளை அறியாத இல்லறம் கண்டவள் ! பெரிய குடும்பம் ஆனதால் இழந்தது என்னவோ ஓய்வும் கூட !காத்திருந்த கடமை காக்க .......வீணையை விட்டெறிந்த கலைமகள் !நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா நாங்கள் நேரில் காணாதது ! எங்களைப் பெற்ற அன்னை சரசாவை கௌரவிக்க நோபல் பரிசு தகுதியற்றது !அவள் அன்பும் பாசமும் அசைபோட்டால்.... கண்கள் அருவியாகும் , உள்ளம் ஊனமாகும் !சோகம் சுமந்த காலத்தில் கண்ணிலும் சிரிக்கத் தெரிந்த கருணை அவள் ! அவள் அன்பின் அகராதி ! அகரம் அறியா சிகரம் !ஏழு வயிறு பசியாற தன் பசியை மறந்து மறைத்தவள் ! தங்கத்துக்கு தலதெறிக்க ஓடும் தமிழகத்தில் பிறந்து .....தங்கமே அறியாத , எங்கள் பத்தரை மாத்துத் தங்கம் அவள் !பஞ்சம் தலை எட்டிய தருணங்களில் ......பஞ்சத்தையே எட்டி உதைத்த பஞ்சநாதத்தின் மாட்டுப் பெண் !
அம்மி குழவி அவள் தலையணை ! கட்டாந்தரை அவள் கட்டில் ! சொகுசு என்றால் என்ன என்று அறியாமலேயே அழிந்துபோன ஜென்மம் !
ஒத்த வருமானத்தில் மொத்தக் குடும்பத்தையும் கட்டிக் காத்த கருணையின் வடிவம் !
தன்மேல் கிளையே முறிந்து வீழ்ந்தபோதும் , பிள்ளைமேல் வீழ்ந்த சருகை சாடிய தேவதை ! நாங்கள் விவரம் அறிந்த இவ்வேளை எங்கள் கைம்மாறு பெறக் காத்திராமல்.....போய்ச்சேர்ந்த புண்ணியவதி !
உன் இழப்பை நினைச்சாலே.... நெஞ்செல்லாம் பிசையுதம்மா ! தாயே ! அன்னையே ! அம்மாவே ! நீ மீண்டும் பிறப்பாயோ ! நின் மடி தலை சாய்ந்தபடியே........ என் முடிவு நிகழாதோ .?........!!!!!!!😢😢😢😢😢😢!!!!!