கண்ணதாசனின் கற்பனை வரிகளில் மனிதனும் இறைவனும் :
மனிதன்:
படைத்த நின் படைப்பில் யாவும்,பரிணாம வளர்ச்சியே கண்டோம்!ஆனால் இன்று விதவித குணங்கள் தோன்றித் துன்பமுறும் அவஸ்த்தையை அறிவாயா நீ? அதனால் தொடக்கத்தில் நீ வகுத்த அடித்தளமே ஆட்டங்கண்டதன்றோ?நின் பதில்தானென்ன?இந்நிலையில் வாழும் வாழ்வில் நிம்மதி வரும் வழி சொல்வீரா?
இறைவன் :
கண்களை வெளியே வைத்தேன்!காதோடு,நாசி,வாயைப் புறத்தே வைத்தேன்! பண்படும் மனம் மட்டும் பதுக்கி உட்புறம் வைத்தேன்! உள்ளத்தை உள்ளே வைத்த ஒரே தவறால் தானே,உள்ளத்தில் கள்ளம் வளர்த்ததைக் காண வழியின்றி,உதட்டை நம்பி நட்டமுறும் நிலையானதோ! போடும் வேடம் வளர்ப்பானென நானறியேன்! உண்மை பள்ளத்தில் பதுங்கும் வண்ணம் பாவிநான் பிழையே செய்தேன்!கண்மட்டும் பரிவுகாட்டி,கனிந்த சொற்கருணை காட்டுமென கனவிலும் நான் காணேன்!
உன்தலைமுறையில் உலகமழியும் ஓர் நாளில்,என்தலைமுறையில் மீண்டும் இயங்கும் அந்நாளில்...இன்னுமோர் மனிதஜாதி இயற்கைப் படைக்கும் அத்தருணம், இன்னொருமுறை ஒரு தவறு இனி செய்யேன்!இதயத்தை மறக்காமல் முகத்தில் வைத்தே ,நான் செய்த பாவத்தின் பரிகாரம் காண்பேன்!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு