Super star birthday
இன்று சூப்பர் நட்சத்திரம் பிறந்த தேதி! தேதியும், மாதமும் பனிரெண்டாய் தொடங்கியப் பயணம்!புகழின் உச்சியில் ஒரு ஜன்மம்! அதன் படப்பிடிப்பு என்றால்… செவ்வாய் கிரகத்திலும் கூட்டம் கூடும் !நடிப்புக்கோர் சிவாஜி …என்றால் தனக்கென்று ஓர் தனிவழிகண்ட ஓர் சிவாஜி ராவ்! வேற்று மண்ணில் பிறந்தும் தமிழ் நாடே போற்றும் புகழ்!குறுகிய காலத்தில் பட்டினியையும், பட்டத்தையும் ருசித்த அனுபவத்தில் அறிந்த பாடம்……" திருப்தி என்பது பொருளில் அல்ல அது மனம் சம்பந்தப் பட்ட விஷயம்! " மனிதனாக வாழ முயல தினமும் வாழ்க்கைப் புத்தகம் வாசிப்பவர்!சம்பந்தமில்லாதத் துறையிலும் ஞானியாகத் திகழ்பவர்! அரசியல் அழைத்தும் அதைப் பற்றித் தெளிந்ததால் …அதை அலட்சியப் படுத்துபவர்! எந்த அந்தஸ்திலும் எளிமை,பணிவு கொண்ட ஒரு வித்தியாசம்! வாழ்கப் பல்லாண்டு!
இவரையும் இப்படி வாழ்த்தலாம்! இது எப்படி இருக்கு!😃!!
இவரையும் இப்படி வாழ்த்தலாம்! இது எப்படி இருக்கு!😃!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு