சனி, 19 டிசம்பர், 2015

சிரிப்பு

சிரிப்பு:
உதடுகள் தொழில்கள்  ஆறு:சிரித்தல்,முத்தமிடல்,உண்ணல்,உறிஞ்சல்,உச்சரித்தல்,இசைத்தல்.
அதில் ,சிரிக்கத் தெரியாத உதடுக்கு…மீதி ஐந்தும் WASTE ! பூட்டிக் கிடக்கும் வாழ்வைத் திறக்க வல்லது…இந்த சாவி! சர்வ தேச எந்த உதடும் இம்மொழி பேசும்!சிரிப்பில் வரும் கண்ணீர் கரிப்பதில்லை!ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும்…மனம் ஒட்டடை அடிக்கப் படுகிறது!ஆனால்,சிரிப்பும் …முரண்பட்டால் ஆபத்தே!சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்துத் தொலைத்தாள்…அதுதான் பாரதம்!ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில் …சிரிப்பைத் தொலைத்தது…இராமாயணம்! ஒருவர் தனியாக சிரித்தால் …? விளக்க வேண்டிய அவசியமே…இல்லை!பகலில் பலருடன் சிரிக்கத் தெரியாதவர்க்கு…மரணம் படுக்கைத் பட்டிப் போடத் துடித்துக் கொண்டிருக்கும்!ஒரு குழந்தை சிரிப்பைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு விசாலத் தோட்டம் முழுக்கப் பூத்துக் குலுங்கும் மலர்களும் …அதன்முன் ஏமாந்து போகும்!சிரிப்பு…காதலின் முன்னுரை!கடனுக்கு மூலதனம்! உதடுகள் சந்ரோதயம்!விலங்கு நீக்கிய மனித மிச்சம்!மனிதா சிரி! மரிக்கும்வரை சிரி! மரணம் யோசிக்க…சமயம் கொடு! ஜீவ அடையாளமல்லவா இந்த சிரிப்பு!ஒவ்வொரு சிரிப்பிலும்  ஒரு அங்குல ஆயுள் நீளும் என்று சொன்னால்…நம்பு! ஜோசியனை நம்பும் நீ…இதையும் நம்பி……சிரி…சிரி!சிரிக்கத் தெரிந்த உதடுகள்…துப்பட்டுமே…துன்பம்!!!!!😃😃😃😃😃!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு