நிகழ்காலமே நிஜம்!
வாழ்க்கை…………யதார்த்தங்கள்……………பார்ப்போமா……:
சாமங்கள் முடிந்த பின்னால் சந்திரன் எஞ்சி நிற்கும்! ஈமங்கள் முடிந்து போகும்வரை, ஈரங்கள் காத்து நிற்கும்!
நாமங்கள் முடிந்த பின்னே ஞானங்கள் பாராட்டு பெறும்!
உலோபியின் புதையலாய் ……வாகனம் நிறுத்த இடம் கிடைத்து களிக்கும் உள்ளம்! அண்ணாந்துப் பார்த்து ஆச்சரியப் படும் உலோகப் பறவை! விலங்கினத்திலிருந்து வித்தியாசம் காட்டும் கால்களின் எண்ணிக்கை! வாழ்க்கையை வயிற்றுக்கு விற்கத் துடிக்கும் சதவிகித சமூகம்!
நடைபயில விழையும் மரங்களைக் கண்டதுண்டா?
குடையை மழைக்கெதிராய் ப் பிடிக்கும் கறுப்புக் கொடியாகப் பார்த்ததுண்டா?விண்ணிலிருந்து அளவிலா முத்துக்கள் திரவமாகத் தெறிப்பதை ரசித்ததுண்டா?
அந்தியின் அழகு வண்ணங்களை ஆராதித்ததுண்டா? யந்திர வாழ்க்கை மீறி……எட்டி நின்று வாழ்வை அலசியதுண்டா? வாழ்வின் நோக்கம் என்ன என்றே சிந்தித்ததுண்டா? எவ்வளவு துய்க்கிறோம் என்பது சரியா? எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பது சரியா? நீசெலவழிக்காத வரை உன் வங்கிக் கணக்கு உனதல்ல! யோசிக்க………யோசிக்க………உண்மை விளங்கும்! மனம் சலவை தேவை! வாழ்க்கை வெளுக்கும் ! வானம் வசப்படும்! வாழ்க!
- கா.ம.க

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு