' குழந்தை' கவிதை அறிமுகம் :
கள்ளிக் காட்டு கம்பனின் அறிமுகத்தோடு ஆரம்பம்:கபிலன் வைரமுத்து.....!குழந்தைப் பற்றிப் பேச வந்திருக்கும்....என்குழந்தை!சிசுவில் இவனைத் தலைக்குமேல் தூக்கி அண்ணாந்து பார்த்தேன்! இன்று தலைக்கு மேல் வளர்ந்த காரணத்தால் அண்ணாந்துப் பார்க்கிறேன்!இவன் மழலைப் பேசும்போதே இலக்கணமாகப் பேசியவன்! அப்போதே....இவன் கவிஞனாகிவிடுவானோ என்று கவலைப் பட்டேன்!என் சந்தேகம் இன்று சரியாய்ப் போயிற்று!எங்கள் ஆசையில் விளைந்த இரண்டாம் வித்து! இவன் மீசையில்லா வைரமுத்து!மகனே! தமிழுக்கு உன்னை வார்க்க நினைக்கிறேன்! தாயகம் உன் குரல் கேட்க நினைக்கிறேன்!உன்னையும் கவிஞனாய்ப் பார்க்க நினைக்கிறேன்! உன்னிடம் மட்டுமே தோற்க நினைக்கிறேன்!வா! சூரிய ஒளியில் சொற்கள் எடுத்து...அன்னைத் தமிழுக்கு அணிகலன் உடுத்து!என்றன் என்றன் மகன் என்பது தவிர்த்து...உன்றன் தந்தை என்பதைக் காட்டு!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு