அன்னையர் தின அர்ப்பணிப்பு!
என் அன்னை சரசுவதி அவர்கள் நினைவுநாள் ( மே 8 ) மற்றும் அன்னையர் தினம் ( மே 10 )முன்னிட்டு........:
அன்னையின் நினைவு நாள்! ஆன்மா சாந்தி கொண்டு அருள்புரிய வேண்டி...... நினைவு கொள்ளும் பிள்ளைகளும், பிள்ளைகளின் வாழ்க்கைத் துணைகளும், பேரக்குழந்தைகளும், கொள்ளுபேரக் குழந்தைகளும்!உள் நாட்டிலும், வெளிநாட்டிலும்!இப்போதும், எப்போதும்!எங்களை கரை சேர்த்த ப் புண்ணியவதி! ஏழு வயிறு பசி பார்க்காமல் ....தன் வயிறை மறந்த தன்னலமற்ற தியாக உள்ளம்! நாங்கள் உண்ணும் போது இன்னும் தேவை என எழுப்பும் எங்கள் மனக்குரல் கேட்பாள்! மந்திரம மாயமாய் மறுநொடி மறக்கும் எங்கள் தேவை! பட்டிகாணா தீனி போட்ட தெய்வம்....கெட்டபின்னே நான் ஞானம் பெற்றேன் என்ன லாபம்? அவள் வாழ்ந்த காலம் .....பாசம் காட்டத் தெரியா பாவியாய் நான் வாழ்ந்தென்ன லாபம்! எப்படி வாழ்ந்தாலும் தாங்கிக் கொள்ளும் பூமியைப் போல.....ஏற்றுக் கொண்ட உதாரண அன்னை! அவள் படிக்காத சரசுவதி! எனினும் படித்தவர்களுக்கே பாடம் எடுக்க தகுதிபெற்றவள்! எங்களைப் பெற்றவள்!தந்தையின் சொற்ப வருமானத்திலும், அரிசிக்கே பஞ்சம் வந்த காலத்திலும், இத்தனை உயிர்களையும் காத்து......நல்லதங்காளை........ஞாபகப் படுத்தாத ஒரு ஜென்மம்! தாயே......பத்துத் திங்கள் சுமந்த உனக்கு........ஒரு பத்தே நிமிடம் மீண்டும் தாய் மடியேங்கும் .....எ
ன் மனக்குரலோசைக் கேட்கவில்லையா! பொத்திப் பொத்தி வளர்த்தாயே......என் தாயே......இந்த ஏமாற்று உலகில்..,..தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தித் தேர்களில் வருவதென்ன! தர்மங்கள் பல்லக்கிற்குக் காத்திருந்துத் தாமதமாய் வருவது..... தெரியாமல் வளர்த்து விட்டாயோ? காணத கடவுளாய்க் காணாமல் போனாயோ! தேடிக் கிடைக்காத .....தேவதையாய் ஆனாயோ!....இருக்கும் கோயில் போதாதென்று.... இன்னொரு ( குடியிருந்த கோயில்) கோயிலாய் ஆனாயோ ! உன் புகழ் வாழ்க! உன் நினைவு தங்கவே என் உள்ளம் இருக்குதே!
[5/10, 15:52] Puvanasekar Subramaniam: அந்த ஆகாயம் சிறிதே! அவள் தியாகங்கள் பெரிதே!வெயிலைச் சுமப்பாள்! நிழலைக் கொடுப்பாள்!அம்மாவே தெய்வம்! அது ஒரு ஆகாய தீபம்!அன்னை மடியில் கண் திறந்தோம்! நம் மடியில் அவள் கண்மூடுவதென்ன நியாயம்? அவள் சுமந்த கடனுக்கா அவளை சுமந்தேன்! அதோடு விட்டேனா......பாவி......பாவி.......அன்னம் இட்டவளை அனலில் ....வேக விட.......மகனை... .....தீயிட.......சொல்ல.....அன்புப் பிள்ளையாய் அழுதே......சாய்ந்தேன்!
அவளுக்கு நிகர் அவளே! அவளே அம்மா! அவளே அன்னை! அவளே தாய்! அவளே தெய்வம்!
அவளே எல்லாம்!
அன்னையர் தினமாம் அனைவரும் அவள் தியாகம் நினைவில் கொள்வோம்! பெண்குழந்தை பிறந்தால் உச்சமாக மகிழ்ச்சி கொள்வோம்! அவளும் அன்னையாவாள் ஒரு தினம்! அன்பின் அகராதியாவாள்! ஆண்களையும் அவளே படைப்பாள்! படைப்பவர் கடவுள்தானே! ஆனால் கருணைக் கடவுள்! சோகம் சுமந்தாலும் கண்ணில் இனிப்பாள்! அகரம் அறியாவிடினும் சிகரம் அவளே!
சந்திரன் சூரியன் மறையலாம், சரித்திரம் புரண்டு படுக்கலாம்! தாய்மை மட்டும் இல்லாது போனால்....பூமி இயக்கம் இல்லையே! சுமப்பதே சுகமாக நினைக்கும் ஒரு ஜீவன்! கர்ப்பம் தாங்கும் பத்துத் திங்கள் கருவில் சுமந்தே வாழ்பவள்! காடு சென்று சேரும் வரை நெஞ்சில் சுமப்பவளும் அவளே!பஞ்சு மெத்தையும் பட்டு விரிப்பும் .....அன்னைமடிக்கு ஈடாகுமா?தாயின் கைகள் கோதும் இன்பம் அறியாதவனே.....தென்றல் வருடுவதும் மலர்கள் தீண்டுவதும் புகழ் பாடுவான்!கந்தல் சேலை அணிந்தாலும் அவளே உனக்குக் கலைவாணி! கஞ்சி கரைத்துக் கொடுத்தாலும் அவளே உனக்கு மகராணி!கடவுள் இல்லை என்பவனைக் கேட்டுப்பார்.......தாயே கடவுள் என்றே சத்தியம் செய்வான்! வாழ்க தாய்மை! வளர்க தாய்க்குலம்!
- அன்னையர் தின அன்பு காணிக்கை( கா.ம.க)
தாய்மடியில் உறங்கும் சேய்! சேலை முனைப்பால் காற்றைத் தடுப்பாள்......காயம்படுமோ.....என்றே! அவளே அம்மா!
HAPPY MOTHERS DAY!🙏! !! வாழ்க!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு