செவ்வாய், 27 ஜூன், 2017

வார்த்தைகள்

அம்பு போலவும், மலரைப் போலவும் , வார்த்தைகள் , காயப்படுத்தவும் , மகிழ்ச்சியூட்டவும் வல்லவை !அன்று மலர்ந்த மலராக மகிழ்ச்சியூட்டவல்ல வார்த்தைகள் வரமோன்றுமில்லை கடவுள் கொடுக்க ! அது உனது முதிர்ச்சியைக் காட்டும் அளவுகோல் ! ஆக,....... சீக்கிரம் வயதுக்கு வா ! வாழ்த்துக்கள் !

ஞாயிறு, 25 ஜூன், 2017

ஜூன் 19

மான்களில் நீ....கஸ்தூரி மான் ! மனித நேயத்திற்கு மறக்க முடியாத  எடுத்துக்காட்டு !மாதர் குல  மாமனிஷி !
வாழ்வியல் பாடம் வாழ்ந்து காட்டும் நடைமுறை உதாரணம் ! அனைத்தையும் அன்புடன் அணுகச் சொல்வது கிருத்துவ பைபிள் ! அதை செயலில் சாதித்துக் காட்டுது இந்த இந்துக் கல்லூரி ! உடன்பிறப்பாக பெருமை கொள்வதைத் தவிர யான் ஒன்றும் அறியேன் பராபரமே ! கைபிடித்தவர் சின்னத்துரையாக இருக்கலாம் ! மனமோ எண்ணங்களோ சிறியவை அல்லவே அல்ல ! பொருள் பற்றால் அவதியுறும் மானுடம் மத்தியில் அதற்கு முக்கியம் தராத காரணத்தால் குலையாத குடும்பத்தைத் தக்க வைத்துக் கொண்ட தயாள மனம் கொண்ட...  தாயே ! வேற்றுமையோ வேற்றுமைகளில் ஒற்றுமைக் காணத் தெரிந்த பக்குவச் சிறப்பே !  ஒவ்வொரு நிகழ்விலும் பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டு ரசிக்கத் தெரிந்த வித்தகியே ! அந்த வித்தைக் கற்க முயல்வதை விட  பொறாமை கொள்வது எமக்கு எளிதே ! சிறார் மனதைக் கொள்ளை கொள்ளும் கொள்ளைக்காரி ! மூன்று பேத்தியும் மூன்றுப் பேரனுமே அதற்கு சாட்சி !
பிறந்த தினம் இன்னும் பலப்பல காண வாழ்த்துவதில் மகிழ்கிறோம் !வாழ்க பல்லாண்டு என வானுயர வாழ்த்துவதில் பெருமையடைகிறோம் !

WISH YOU A VERY HAPPY BIRTHDAY !

அப்பாச்சி 70

Sample 70 ;

அம்மாச்சி ........!அம்மாச்சிகிட்ட புடிச்ச விஷயம்னா......., அம்மாச்சினாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் ! அவங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்வீட்டான பர்ஸன் !அவங்க தூங்கிக்கிட்ருப்பாங்க , நான் எப்ப எழுப்பி ஏதாவது கேட்டாலும் .... கொஞ்சம் கூட தயங்காம அட்டன் பண்ணுவாங்க !அப்றம் அவங்க எங்க போனாலும் எனக்கு புடிச்சது கெடச்சா கண்டிப்பா வாங்கிட்டு வருவாங்க ! ( இப்ப கூட சென்னேலருந்து லட்டு வாங்கீட்டு வந்தாங்க )அப்பறம் காலேஜ்லேருந்து வீட்டுக்கு வந்தவொண்ண, காலேஜ் கதையெல்லாம் பொறுமையா கேக்கற ஒரே ஜீவன் , அம்மாச்சிதான் !ஆக்ச்சுவலா பாட்டி பேத்தி மாதிரியே நாங்க பழகமாட்டோம் ! நாங்க பெஸ்ட் ப்ரண்ட்ஸ் மாதிரிதான்!
நான் அவங்கள அம்மாச்சின்னு கூப்டறத்கு பத்லா மச்சி....மச்சின்னுதான் கூப்டுவென் ! அப்பறம் முக்கியமான விஷயம் : அவங்க ஒரு ஸ்ட்ராங்கான பர்ஸன் ! *அம்மாச்சின்னா.....மொத்த பாமிலியையும் கனெக்ட் பண்ற ஒரு ஃபாக்டரா இருக்காங்க*!
எங்க ச்சயில்ட்ஹுட் ரொம்ப ஆஸமா இருக்கும் ! அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்றது செமயா இருக்கும்! ஜாலியா இருக்கும் !

தாங்க்யூ.....அம்மாச்ச்சி !
யூ ஆர் தி மோஸ்ட் அமேசிங் பர்ஸன் ஆன்த எர்த் !டுடே ஈஸ் யுவர் ஸெவன்டியத் பர்த்டே .....ன்னு நான் சொல்ல மாட்டேன் ! ஸெவன்த் பர்த்டேன்னுதான் சொல்லுவேன் ! ஒங்க தாட்ஸ் அவ்ளோ எங்கா இருக்கு !
ஹாப்பி பர்த்டே !அம்மாச்சி.....!
கீப் ராக்கிங் !

திங்கள், 8 மே, 2017

மே8

மே8 :
உலகம் அறிந்த திக்கு எட்டு !
டிபிஎஸ் குழாம் மறவாத தினம் மே எட்டு !அன்னை சரசுவதி நினைவு தினம் !
அவள் அறிந்த அகிலம் , ஆறு பிள்ளைகள் நாங்கள் ! நாங்கள் வளர வளர , அவள் தேய்ந்து , கரைந்து காணாமல் போனாள்......ஐயகோ !
அவள் ஒரு துரையைக் கைப்பிடித்து ...... எங்களைக் கரை சேர்க்கப்பட்ட பாடு......எழுதாத வரலாறு !
படிக்காத அந்த  மேதை பெயரோ  படிப்புக்கு சொந்தம் காணும் கடவுள் பெயர்....... கலைமகள் எனும் சரசுவதி !
கிழக்கு மேற்காக மட்டுமே ஒளிகொடுக்கும் கதிரவன் அறியாதது.......எங்கு உதித்தால் எங்களுக்கு வெளிச்சம் என்று அவள் அறிந்த ஒன்று !
அவள் வியர்வை துடைக்க எங்கள்  விரல் வளர்ந்த நேரம்.........விரல் உண்டு..........வியர்வை எங்கே ! ஐயகோ !நேற்று வரைப் புன்னகை...... இன்று வெறும் புகைதானா ? ஐயகோ.......!
அவளை உணராத காலம் , அவள் வாழ்ந்த காலம் ! அவள் அருமை உணர்ந்த காலம் , அவள் கரைந்து மறைந்த காலம் !அவள் இமயம் கட்டி இழுத்த இழைகளில் நெய்தது எங்கள் மானம் மறைக்கும் ஆடைகள் !நான்கு சுவர் நடுவே மூட்டை கட்டிய இருளில் முழு ஆயுளையும் தொலைத்தவள் ! ஒருவேளை உணவை தயாரித்து பரிமாறி  முடியுமுன் மறுவேளை வந்ததால் இடைவேளை அறியாத இல்லறம் கண்டவள் ! பெரிய குடும்பம் ஆனதால் இழந்தது என்னவோ ஓய்வும் கூட !காத்திருந்த கடமை காக்க .......வீணையை விட்டெறிந்த கலைமகள் !நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா நாங்கள் நேரில் காணாதது ! எங்களைப் பெற்ற அன்னை சரசாவை கௌரவிக்க நோபல் பரிசு தகுதியற்றது !அவள் அன்பும் பாசமும் அசைபோட்டால்.... கண்கள் அருவியாகும் , உள்ளம் ஊனமாகும் !சோகம் சுமந்த காலத்தில் கண்ணிலும் சிரிக்கத் தெரிந்த கருணை அவள் ! அவள் அன்பின் அகராதி ! அகரம் அறியா சிகரம் !ஏழு வயிறு பசியாற தன் பசியை மறந்து  மறைத்தவள் ! தங்கத்துக்கு தலதெறிக்க ஓடும் தமிழகத்தில் பிறந்து .....தங்கமே அறியாத , எங்கள் பத்தரை மாத்துத் தங்கம் அவள் !பஞ்சம் தலை எட்டிய தருணங்களில் ......பஞ்சத்தையே எட்டி உதைத்த பஞ்சநாதத்தின் மாட்டுப் பெண் !
அம்மி குழவி அவள் தலையணை ! கட்டாந்தரை அவள் கட்டில் ! சொகுசு என்றால் என்ன என்று அறியாமலேயே அழிந்துபோன  ஜென்மம் !
ஒத்த வருமானத்தில்  மொத்தக் குடும்பத்தையும் கட்டிக் காத்த கருணையின் வடிவம் !
தன்மேல் கிளையே முறிந்து வீழ்ந்தபோதும் , பிள்ளைமேல் வீழ்ந்த சருகை சாடிய தேவதை ! நாங்கள் விவரம் அறிந்த இவ்வேளை எங்கள் கைம்மாறு பெறக் காத்திராமல்.....போய்ச்சேர்ந்த புண்ணியவதி !

உன் இழப்பை நினைச்சாலே.... நெஞ்செல்லாம் பிசையுதம்மா ! தாயே ! அன்னையே ! அம்மாவே ! நீ மீண்டும் பிறப்பாயோ ! நின் மடி தலை சாய்ந்தபடியே........ என் முடிவு நிகழாதோ .?........!!!!!!!😢😢😢😢😢😢!!!!!

வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஒரு பதினெட்டு மாடி கட்டிடம்.அதன் உச்சியில் வெள்ளை அடிக்கும் ஒருவன்.....தொங்கும் கயிற்று ஊஞ்சலில் அமர்ந்தபடி......இடது கையில் டப்பாவும்......வலது கையில் ஒரு ப்ரஷ்ஷூம் ! கீழிருந்து அவனை மேலே பார்க்கும் நமக்கே தலை சுற்றும்.அவனுக்கு?
அவன் என்ன கின்னஸ் சாதனையா புரிகிறான்?அன்றாட தொழிலல்லவா அவனுக்கு ! என் கண்கள் குளமானது !

 அது அவன் தொழிலா ? தினசரியா ? இதே போலவா ? மனம் கனத்தது ....... வலித்தது ! தன்னை நம்பி ஒரு குடும்பத்துக்காக......தினமும் ஆகாயத்தில் தொங்க வேண்டுமா ? உயிருக்கு உத்திரவாதம் இன்றி ....வீடு திரும்பும் வேலையா ?

இப்போது புரிந்தது ! அவனை இந்த அளவு தினமும் உயர்த்துவது .....அந்தக் கயிறு அல்ல......வயிறு !

புதன், 18 ஜனவரி, 2017

[1/18, 10:24 PM] kapun2002: *தெய்வம் கல்லானக் கதை*
( பொறுமையாக படிக்க முடிந்தவர்க்கு ) :

ஒருநாள் விடிகாலைப் பொழுது,தேவலோகத்தில் இறைவன் கண் விழித்தெழுந்தான் ! அவன் முகத்தில் ஒரு  வேதனை தெரிந்தது !
அதற்கு ,அவனது பக்தர்களும்,அவர்களது கோரிக்கைகளுமே காரணம் ! அத்தனை பேருக்கும் இறைவன் என்ற வகையில் இன்று பதில் சொல்லியாக வேண்டும் !
இந்த.... மத போதகர்கள்.... *திக்கற்றவர்க்கு தெய்வமே துணை*என்று பிரசங்கிறார்கள் ! அதை நம்பிக் கொண்டு இந்த அப்பாவி ஜனங்களும் ...நீயே கதி என்று என்னிடம் வந்து விடுகிறார்கள் ! நான் என்ன கதியில் இருக்கிறேன் என்பது எனக்குத்தானே தெரியும் !
[1/18, 10:24 PM] kapun2002: ஆமோதிப்பதுபோல் சிரித்தான் காலதேவன் ! நீ சொன்னதுதான் சரி, சிலையாக மாறிவிடு ! மனிதனுக்கு...கஷ்டத்தைக் கொடுக்க ஒரு காலம் வந்ததென்றால்........அதை நீக்கவும் ஒரு காலம் வரும் ! காலத்தின் கணக்கின்படியே சகலமும் நடக்கட்டும் என்று விட்டுவிடு!உனக்கெதற்கு நடுவில் ஒரு !
[1/18, 10:24 PM] kapun2002: அபிஷேகம்/அர்ச்சனை செய்,காணிக்கை செலுத்து ......இதை செய்தால் கடவுள் நீ கேட்பதைக் கொடுப்பார் என்றுவேறு நம்ப வைக்கிறர்கள் ! மக்களும் அதையெல்லாம் செய்துவிட்டு......என்னைக் கொடு....கொடு என்றால்....? அதற்கு நான் எங்கு.....போக !

அலங்காரம் செஞ்சேன்,அங்கப்பிரதட்சணம் செய்தேன்,ஆடை சாத்தினேன் என்றால்........நானா.....கேட்டேன் ! தேவையில்லாம....கடன் பட்டேன் ! இன்று கலங்குகிறேன் ! நான் என்ன .....வைத்துக் கொண்டா இல்லை என்கிறேன் ! மக்களைச் சொல்லிக் குற்றமில்லை...இறைவனிடமே இல்லை என்றால் ......யார்தான் நம்புவார்கள் !
இப்படி தனக்குத் தானே கடவுள் புலம்பிக் கொண்டிருந்தபோது...... *காலதேவன்* அங்கு வந்தான் ! பக்தர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் நிர்கதியாக.....கலங்கிய....கண்களோடு நின்ற கடவுளை....கருணையோடு....விசாரித்தான் ! மிகுந்த உருக்கத்தோடு இறைவன் விவரித்தான் ! காலதேவன் கடவுளுக்கு ஆறுதல் படுத்தி...சொன்னான் : இன்பமோ,துன்பமோ ....ஒவ்வொருவருக்கும் ,அவரவர் வினைப்பயனுக்கேற்ப அவர்கள் கருவிலேயே தீர்மானிக்கப்பட்ட ஒன்று ! சிரிக்கும் வரம் பெற்றவன் சிரிக்கிறான்....அழுகின்ற நேரம் வந்தவர்கள் அழுவார்கள் ! நீ காலத்தின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிதானே....தவிர....கட்டளையை மாற்றும் அதிகாரம் பெற்றவனல்ல ! இதைக் கேட்ட இறைவனுக்கு எரிச்சல் வந்தது .......அழுது கொண்டிருக்கும் பக்தனோடு.....நானும் சேர்ந்து அழுவதற்குப் பதிலாக ......நான் ஒரு கல்லாக,மண்ணாக ஒரு மூலையில் விழுந்து கிடக்க வேண்டியது தான் !
ஆமோதிப்பதுபோல் சிரித்தான் காலதேவன் ! நீ சொன்னதுதான் சரி, சிலையாக மாறிவிடு ! மனிதனுக்கு...கஷ்டத்தைக் கொடுக்க ஒரு காலம் வந்ததென்றால்........அதை நீக்கவும் ஒரு காலம் வரும் ! காலத்தின் கணக்கின்படியே சகலமும் நடக்கட்டும் என்று விட்டுவிடு!உனக்கெதற்கு நடுவில் ஒரு வேதனை ?
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த இறைவன்.....நீண்ட யோசனைக்குப் பிறகு.....என்ன நினைத்தானோ......எழுந்தான்......தன் ஆலயம் நோக்கி நடந்தான்.....உள்ளே சென்றான்......சிலையாக அமர்ந்து.....வேதனை மீண்டான் !

பக்தர் ஒருவர் ....அங்கம் நனைத்து.....பிரதட்சணத்திற்கு....அவசர அவசரமாக......தயாரானார் !

திங்கள், 16 ஜனவரி, 2017

*காய்கள் மட்டுமல்ல , காலம் கனியவும்....காத்திருத்தல் அவசியம்*

வானில் உதித்தப் பிறை நிலவு ....முழுமதியாவதும் , விதை முளைத்து செடியாவதும்.....காய் கனியாவதும்.......மழலைப் பிறப்பதும்....மறுநாளே நிகழ்வதில்லை !
பயணிக்க , பச்சை விளக்குக் காகவும் காத்திருத்தல் ......கட்டாயம் தேவை !
காத்திருக்கத் தவறினால்.....காலம் கூடக் கனிவதில்லை !
நிதானம்,காத்திருத்தல் வாழ்வின் ஓர் அங்கம் !