போதிமரம் தேடி .....!
நெருப்பாய்க் கொளுத்தும் கோடை வெய்யில் சாலையில்,கால்கள் தகிக்க,கண்கள் எரிய,தலை வேக,விசிறிக் குடை பிடிக்கும் மரம் தேடி மனம் அலைய,நாக்கு வரண்ட நொடியிலே......கண்டேன் ,தொலைவினிலே ஓர் ம(வ)ரம்! ஒற்றைப் புளியமர ஓரம் தந்த நிழல் ஓர் ஆச்சரிய இ லவசம்!
கடைத்தெருவில் ஓடிக் காலொடிந்தப் பூங்காற்றும்,நிழல் தேடி நொண்டியடித்தங்கே வந்ததும் என் வரமே!
பிள்ளைச் சிரிப்பும்,பிறைமதிபோல் புன்னகையும்,வெள்ளை உடையும்,வெளுத்த தலையுடனும்,சித்தரைப் போலொருவர்,சிரித்தபடியங்கு வந்தார்!
' புத்தரடா 'நான் என்றார்! போதிமரம் போகாமல்.... புளியமரம் வந்தது ஏன் என்றேன் ? இதன் கீழே நிழல் கிடைக்கும்,ஞானம் கிடைக்க மார்க்கமில்லை ' என்றுரைத்தேன்!
'பார்த்தால் இளைஞன் நீ,பக்குவமாய்ப் பேசுகிறாய்.ஆனாலும் உன்னிடத்தில் ரகசியங்கள் அவிழ்வதனை ரசிக்கவே செய்கின்றேன்! ஆயிரம் ஆண்டுகள் போனபின்னே,போதிமரம் மீண்டும் காண பூமி வந்தேன்! ஊரெல்லாம் சுற்றி ,உலா வந்ததில்,நான் கண்டதோ.....,மாடுகளாய் வாழும் மனிதர்கள் கண்டேன்!இல்லறத்தில் இனிமை காணாது,துறவரத்தில் உண்மை காணாது,நல்லறத்தைப் பேண நாதியற்ற சமூகம் கண்டேன்!தாலிக்கயிறுகளில் ஆரம்பிக்கும் தாம்பத்தியம் கூட தடுமாறி,தடம்புரளும் அவலம் கண்டேன்!பொய்யே, தேசத்தின் பொதுமொழியான வேதனை கண்டேன்! லஞ்சமும்,போரும்,வணிக மருத்துவம்/கல்விதனைக் கண்டேன்! காணும் துயர்க் கெல்லாம் காரணம் நானறியேன்!அன்றொருநாள் எனக்கு ஞானம் வழங்கிய போதிமரம் மீண்டும் காண அலைகிறேன், நண்பா,வழி சொல்ல முடியுமா உன்னால்?
தேடியே அலைந்தோம்,திசைதோறும் திரிந்தோம்! போதிமரமோ கிடைக்கவில்லை!புத்தர் தளர்ந்தார்!
புன்சிரிப்பாய் நானுரைத்தேன்!
பொருளாதாரத்தில் பொதுவுடைமை!உறவுகளில் உண்மை!சமூகத்தில் சம உரிமை கிட்டும்வரை சங்கடங்கள் ஓயாது!வர்க்கங்கள் இரண்டாக வாழும் வரை,பூமியெங்கும் போர்க்களமாய்த்தானிருக்கும்!புரிகிறதா!
வியந்தேபோன அந்த மகான்.....இந்த ஞானம் நீ பெற்ற வழியென்ன ? எனக் கேட்டார்?
மனிதகுலத்தின் மாபெரும் உத்தமனே......சொல்கிறேன் கேள் :
வாழ்க்கை தந்தப் பாடத்திலே,வந்ததிந்த ஞானமய்யா!என்னுடைய போதிமரம் என்றுமே என் எதிரிலய்யா!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு