முட்டாள்த்தனமான முடிவு!
தேர்வில் தோல்வியுற்ற ஒரு கிராமத்துப் பையன் தன்னை முட்டாள்தனமாக முடித்துக் கொண்டதற்கு…தாயின் மொழியிலேயே ஒரு கனக்கும் கவி கேளீர்:
வீட்டுக்கு ஒத்தமகன், வெயில் படாம வளத்தமகன், எழுத்தாணி புடிச்சமகன்,ஏச்சுப்புட்டு போனானே!
மீச மொளைக்கல்லியே …மேல்படிப்புப் போகல்லியே…ஆசை பழுக்கல்லியே…அரைவழியில போனானே!
பூட்டாத குச்சுவீட்டில்…புயல் காத்து புகுந்திருச்சே…சந்ததிக்கு ஏத்திவச்ச…சரவெளக்கு அணைஞ்சிருச்சே! வக்கணையா உக்காந்து,மார்க்கெழுதும் வாத்தியாரு…சிக்கணமா இல்லாட்டிச் செத்திருக்கமாட்டானே!
பெயிலாகிப் போனது, பீடைவிட்டுப் போனதுன்னு, தேத்தியிருப்பேனே…தெரியாமப் போனானே! என்னைக்குப் பரிட்சை எழவு முடிஞ்சிச்சோ…அன்னைக்கே எம்புள்ள ஆள்பாதி ஆனானே! வேயாதக் கூரைய வெரிச்சுப் பாத்தானே, ஊத்திவச்சக் கஞ்சிய உத்து உத்துப் பாத்தானே! ஒரு நம்பர் தவறிருச்சு,உள்நாக்கு விழுந்திருச்சு! ஈயெறும்பு அண்டாம,எளங்காத்துத் தாக்காம,நோன்பிருந்து பெத்தமகன், நுரைதள்ளிமுடிஞ்சானே!
எம்புள்ள……எங்கண்ணீர்……என்னோடப் போகட்டும்!ஒத்தமகன் பலி குடுத்தேன்!ஊர்மக்களே யோசிங்க!
பாவிமக்கா! பாவிமக்கா! பள்ளிக்கூடப் புள்ளகளா, ஈ பறந்தக் காத்துக்கே, இடிஞ்சு போனா எப்படி?சித்தெறும்புக் கடிக்கெல்லாம் செத்துகித்துப் போகாதீக!தவம்கெடந்து பெத்தவுகளுக்கு தண்டனையா? தாங்குவாகளா?அம்மம்மா! - -----

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு