விறகுவெட்டி!
கதிரவனுக்குக் கீழ்உள்ள அத்தனையும் கவிதைக்குக்கு ஒரு கருதானே!
இதோ………கிராமத்து வாழ்…ஓர் இளம் விதவை………… ………கிராமத்துல……மாசற்ற காத்தெல்லாம் ……கேக்கத்தான் நல்லாருக்கு!
முருக மலைமேல, முள்விறகு நானெடுக்க, பொழப்பு நடக்கணுமே,புறப்பட்டேன் கால்கடுக்க!
எட்டுமேல் எட்டுவச்சு, எட்டுமைல் நடந்தாக்கா……உச்சிப் பொழுது வரும்!உள்நாக்கில் தாகம் வரும்!
செத்த எலி மிதந்தாலும், செல்லாத்தா சுனைத்தண்ணி……உள்நாக்க நனைக்கயில, உசிருக்கே உசுருவரும்!
இண்டம் புதர் இழுக்கும், இலந்த மரம் கைக்கிழிக்கும்,பொத்தக் கள்ளிமுள்ளு,பொடவையில நூலெடுக்கும்!
பொசுக்கென்றே மழை வருமா! போகயில புயல் வருமா? காஞ்ச மரம் காணயில, காட்டு ரேஞ்சர் கண்படுமா?
எங்கிருந்தோ பயம் வரும், எச்சியோ உலர்ந்து விடும், மாதவிலக்கானாலும், பாதியில நின்னு விடும்!
வெறகு வெட்டும் அரிவாளோ……விறக விட்டு வெரல வெட்டும்! கத்தாழ நார்வந்து விறகு கட்ட கயிறு கொடுக்கும்! கட்டிவச்ச விறகு தூக்க, நான் எங்க ஆள் பாக்க! இடுப்புப் புடிப்போட, கழுத்து வலியோட , மந்தை வந்து நான் சேர……மாலை மங்கிவிடும்! மந்தையில விறகு வித்தா,மங்கையத்தான் பாக்குராக! பச்சை விறகுன்னு சொல்லி, பாதி விலை கேக்குராக!
கேட்ட வெலைக்கு வித்து, கேழ்வரக வாங்கிபுட்டு……குடிசைக்கு நான் போனா……அங்க குடிக்கக்கூடத் தண்ணி இல்ல!
என் வீட்டு அடுப்பெரிக்க…………எனக்கே விறகுமில்ல…………இதை………எங்க போய்……… என்னன்னு………நான்……சொல்ல!😢 !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு