வியத்தல்……வாழ்க்கையின் மூச்சு!
பிரபஞ்சத்தைப் போன்று வாழ்க்கையும் எல்லையற்றது!
புறப்பார்வைக்கு சிக்காதவை!எல்லையற்ற ஒன்றை எல்லையற்ற ஒன்றால்தான் அளக்க முடியும்!நம்முள் உள்ள ஒன்று எல்லையற்றது ……… எது? அது மனமில்லாமல் வேறு ஏது! எல்லையற்ற பிரபஞ்சத்தையும், வாழ்க்கையையும் அளந்து பார்க்க மனம் துடித்த போது …பிறந்தது…கலை!மாறாத நிஜங்களான பிறப்பு, இறப்பிற்கிடையில் வந்து போகும் நிஜங்களைக் கண்டறியும் முயற்சியே…கலை! அந்தக் கலைகளில் வலிமையானதும் மொழிக்கு உயிரூட்டுவதும்…கவிதையே!காலம் துளித்துளியாய் சொட்டிக் கொண்டெயிருக்கிறது……தாவரங்கள்…உயிர்கள்…மனிதர்கள்…கிரகங்கள் …என்று பிரக்ஞையற்று!காலத்தின் சிதறும் துளிகளைச் சேமிக்க…மனிதன் கண்டறிந்த கலன்…கவிதை! காலம் மரணத்தை நியாயப் படுத்தும்போது…கவிதை …வாழ்க்கையை நியாயப் படுத்தி வாழச்சொல்கிறது!காலம் பரப்பும் இருளை தீக்குச்சியால் கிழித்தெரிகிறது கவிதை!விஞ்ஞானம் கலையிரண்டுக்கும் அடிப்படை…வியத்தலே!இந்த உலகத்தை வியக்கக் கற்றுக்கொடுக்கும் ஆசான்…கவிதை!
விஞ்ஞானம் விளக்கு வைத்துத் தேடுவதை…கண்கள் மூடிக் கண்டறிகிறது…கவிதை!வாழப்படும்போது வலியாய் உள்ள வாழ்க்கைக் கட்டங்கள் ……வாழ்ந்து முடித்து அசைப் போட்டுப் பார்க்கும்போது…அதுவே வரமாகத் தோன்றும்! தன் அனுபவம் தனது ருசியைத் தாண்டி உலக அளவில் முழுமை நோக்கி அழைத்துச் செல்வன…கவிதைகள்!
கவிதையுடன் கைகோற்கத் தயாரா? வாருங்கள் …மழையில் நனையலாம்! வானவில் ரசிக்கலாம்!மலர்களில் மனம் கரையலாம்! வாழ்வின் வலி தாங்கலாம்! புயலையும் பூகம்பத்தையும் எதிர்கொள்ளலாம்! படைப்பவனைவிட …படைப்பு வலியது! கடவுளைவிட …நம்பிக்கை வலியது!
உண்மைகள் உறங்கும் வேளை…ஊழல்கள் ஊர்வலம் போகும்!
கவிதை ரசிப்போம்! வாழ்வை வியப்போம்! வாழ்க!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு