இன்றைய சினிமா!
#
இந்த சினிமாமயில்கள் தோகை விரித்து நிழல் கொடுக்கும் என்று நினைத்தோம்!ஆனால் அவை நம் ஓய்வு நேரங்களின் மேல் எச்சமிட்டு விட்டன! நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே, மீசை முளைக்க வைத்து விட்டது! பணக்கார வீட்டுப் பெண்ணைப் போல, நாளுக்கொரு புடவைக் கட்டும், நகரத்துச் சுவர்கள்! அந்த சுவரொட்டிகளில், கசாப்புக் கடையில் தொங்கும் உரிக்கப்பட்ட ஆடுகளாய்…உல்லாச நடிகைகள்! நாம் விரலில் மோதிரம் அணிவதுபோல் அவர்கள் உடலில் ஆடையும் அணிந்திருப்பார்கள்!
பெரிசுக் கழுதைகள் ஒரு தீர்மானம் போட்டன.இனி வயதுக்கு வராத கழுதைகளினி 'ஏ' சுவரொட்டி மேயலாகாது! ஐயகோ பாவம்! அச்சிறு கழுதைகள் வாரமும் பட்டினிக் கிடந்தன!
இன்றுப் படத்திற்குப் பாட்டெழுத, கம்பனே வந்தாலும் கதை வேறு! ' குமரன் கடைந்தான் பாற்கடலை! அதைப் பார்த்த இவன் தின்றான் வேர்கடலை!'……இப்படிப் பல்லவி எழுதினால் வாய்ப்பு தேடி வரும்!
எதார்த்தம் என்ற பேரால் அக்குளில் அடிக்கடி அழுக்கு காட்டும் கொடுமை காணீர்! பிரபஞ்சத்தையே தரிசிக்க சௌகரியமான சாளரம் இந்த சினிமா! அதில் நாம் பார்ப்பதென்னவோ…நாய்ச் சண்டைதான்! உயிரைக் கசிய விட்டுக் கொண்டிருக்கும் தேகபலமற்ற தேசத்திற்கு…சினிமா ஒரு மயக்க மருந்தா? அது நம் மூர்ச்சை தெளிவிக்கும் மூலிகையன்றோ!
இளைய சமுதாயம் இதை சலவை செய்யுமா?காலம் பதில் சொல்லட்டும்!!
- நன்றி க.கா.க

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு