ஆணவம் அழியனும் !
புயலாய், புழுவாய், பூமியில் இருப்பினும், கல்லாதவரும் கனிவுடன் வாழ்ந்தால் , நல்லோர் மதிக்க நயம்பட வாழ்வர்! நாணல் போலவே நாணிப்பணிந்து, தேவைப் பட்டால் தென்னை போலிருந்து, மக்கள் மத்தியில் மயில் போலாடி, குழந்தைகளிடையே குயில் போல் பாடி, கோட்டானாகிக் குரங்காகாமல், வாழும் மனிதரை வையகம் போற்றும்! எந்த நேரமும் எகிரிக் குதிப்போர், சொந்த அறிவு துணைக்கு வராது, மத்த அறிவால் மந்தைகளாவர்!
வாழ்ந்து தாழ்ந்த வரலாறு பார்த்தால், தாழ்ந்து வாழ்ந்த சரித்திரம் படித்தால், ஏறும்போதே இறங்கிய சில பேர், ஏறாமலேயே இறந்தவர் சில பேர், ஏறிய இடத்தை இறுகியேப் பிடித்துஇறங்காமலே இருந்தவர் சில பேர், எத்தனைக் குதிரைகள்! எத்தனை வண்டிகள்! எத்தனை யானைகள்! எத்தனை பூனைகள்! இத்தனைப் பார்த்தும், இனியும் பார்த்தும் ……மமதை ஏனோ மறைந்த பாடில்லை! ஆணவம் என்பதும் அழியவே இல்லை! ஆணவம் ஒன்றே அவமெனக் காணும்போதே ……கனிவுறும் வாழ்க்கை! கற்கண்டாய் இனிக்கும் நாட்கள்! !!!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு